பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் விருது வழங்கும்
நிகழ்வு.
மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் 20வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, விசேட விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை (12.04.2026) இரவு மட்டக்களப்பிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர் லயன்ஸ் சடாற்சரராஜாவின் ஒருங்கிணைப்பில் அதன் தலைவர் எஸ்.மனோகரன் தலைமையில் இவ்விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் 306 னு10 லயன்ஸ் மாவட்ட ஆளுநர் லயன்ஸ் க.லோகேந்திரன்; பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தார். இதன்போது மேலும் அக்கழகத்தின் துணை ஆளுநர்களான லயன்ஸ் ஹகீர் அகமட், லயன்ஸ் ரீ.ஆதித்தன் மற்றும் லயன்ஸ் கழகத்தின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவின் மிக முக்கிய அம்சமாக, மட்டக்களப்பு மாவட்ட ரீதியாகச் செயலாற்றும் ஊடகவியலாளர்களின் சேவைகளைப் பாராட்டி அவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும், சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, லயன்ஸ் கழகத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட அக்கழகத்தின் முக்கிய உறுப்பினர்களும் இதன்போது நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
20 ஆண்டுகால சமூகப் பணியைப் பூர்த்தி
செய்துள்ள மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் இந்த விழாவில், சிவில் சமூகப் பிரதிநிதிகள்,
பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment