19 Apr 2026

புதுக்குடியிருப்பு டொல்பின் விளையாட்டுக் கழகத்தின் சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழா.

SHARE

புதுக்குடியிருப்பு டொல்பின் விளையாட்டுக் கழகத்தின் சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழா.

மட்டக்களப்பு மாவட்டம் புதுக்குடியிருப்பு டொல்பின் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழா சனிக்கிழமை(18.04.2026) பிற்பகல் நடைபெற்றது. 

இந்நிகழ்வின் மக்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் பல்வேறு கலாசார விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் பெறுமதியான பரிசில்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன. 

இந்நிகழ்வில் அதிதிகளாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இளையதம்பி சிறிநாத், ஞானமுத்து சிறிநேசன், இரா.சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டதுடன், மண்முனைப் பற்று பிரதேச சபைத் தவிசாளர் கா.செந்தில்குமார், மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரி அதிபர் ம.சோமசூரியம், கிழக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்கள மாகாணப் பொறியியலாளர் சு.சுகிஷன், புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய அதிபர் அ.குலேந்திரராசா உள்ளிட்ட ஊர் பிரமுகர்கள், நலன் விரும்பிகள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் என  பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.












 

SHARE

Author: verified_user

0 Comments: