19 Apr 2026

அக்ஷய திதியை முன்னிட்டு மட்டக்களப்பில் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் புதிய நகைகள் கொள்வனவு.

SHARE

அக்ஷய திதியை முன்னிட்டு மட்டக்களப்பில் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் புதிய நகைகள் கொள்வனவு.

உலகவாள் இந்து மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை(19.04.2026) தமது வாழ்வில் என்றும் குன்றாத செல்வம் பெருக வேண்டி தமது வாழ்வில் இடம்பெற வேண்டிய நல்ல சுபகாரியங்களுக்கு வேண்டிய நகைகளை கொள்வனவு செய்யும் மிக விசேடதினங்களில் ஒன்றான அக்ஷய திதியை முன்னிட்டு மட்டக்களப்பில் இன்று சகல நகைக் கடைகளிலும் மக்கள் வருகை தந்து தமக்கு வேண்டிய நகை கொள்வனவில் ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்தது. 

இன்று காலை சகல நகைக்கடைகளும் மங்களகரமாக அலங்கரிக்கப்பட்டு சிறப்பு கும்ப வழிபாடுகள் இடம் பெற்றதன் பின்பு தமது நகை வியாபாரங்களில் உற்சாகத்துடன் ஈடுபட்டனர். 

இன்றைய இந்த விசேட நாளில் நகை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு விசேட பரிசல்களும் நடைக் கடை உரிiமாளர்களால் வழங்கி வைக்கப்பட்டன. 

இதேவேளை இன்று தங்கம் அதிக விலையில் காணப்படுவதால் இதனை வாங்க முடியாதவர்கள்  அதற்குப் பதிலாக குறைவிலா செல்வம் வேண்டி உப்பு, வெள்ளை பச்சை அரிசி, மஞ்சள், போன்ற பொருட்களைக் கொள்வனவு செய்து பூஜை அறைகளில் வழிபாடு  செய்கின்றனர். 

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரதேசங்களில் இருந்து மக்கள் இன்று நகர்ப் பகுதிக்கு வந்து தமக்கு வேண்டிய நகைகளை கொள்வனவு செய்வது காணக்கூடியதாக இருந்தது.


















SHARE

Author: verified_user

0 Comments: