19 Apr 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முக்கியமான சூத்திரதாரிகள் கொல்லப்பட்டவர்கள்தான் என கதையை முடிக்கப் பார்க்கின்றார் - பா.உ சிறிநேசன்.

SHARE

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முக்கியமான சூத்திரதாரிகள் கொல்லப்பட்டவர்கள்தான் என கதையை முடிக்கப் பார்க்கின்றார் -  பா.உ சிறிநேசன்.

அண்மையில் உதய கம்மன்பில ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கின்றார் கடந்த காலத்தில் புத்தகம் வெளியிடுகின்ற ஒரு கலாசாரம் போய்க்கொண்டிருக்கின்றது. உதய கம்மன்பில புத்தகம் வெளியிடுகின்றார் என்றால் எங்களுக்கு ஒரு சந்தேகம் ஒன்று இருக்கின்றது. அதாவது உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முக்கியமான சூத்திரதாரி அதாவது கொல்லப்பட்டவர்கள்தான் முக்கியமான சூத்திரதாரிகள், அதாவது அந்தத் தற்கொலைக் குண்டுதாரிகள் என்று கதையை முடிக்கப் பார்க்கின்றார். 

என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் வேண்டுகோள் தெரிவித்துள்ளார். 

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட செட்டிபாளையத்தில் வெள்ளிக்கிழமை(17.04.2026) நடைபெற்ற வளையாட்டரங்கு திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளின் கோடிக்கனக்காண பணங்களை சுருட்டிக்கொண்ட அரசியல்வாதிகளிடமிருந்து அவற்றினை மீட்டு பொதுமக்களின் தேவைப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் பயன்படுத்த வேண்டும். 

புலிகளிடம் இருந்த பெருந்தொகையான நிதி குறிப்பிட்ட அரசியல்வாதிகளும் அவர்களோடு இருக்கின்றவர்களின் கைகளில் அகப்பட்டிருக்கின்றது என்று சொல்கின்றார்கள். பல கோடிக்கணக்கான நிதி அவர்களுடைய கையகப்படுத்தப்பட்டதாகச் செய்தி வந்திருக்கின்றன. 

அந்த நிதி இருக்குமாக இருந்தால் உண்மையில் பல மக்களின் தேவைகளை நிறைவேற்றலாம், முடிக்கப்படாமல் இருக்கின்ற பல வீட்டுத் திட்டங்களை முடிக்கலாம், மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை வாழ்வாதாரங்களைச் செய்துகொள்வதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. முடக்கப்பட்டு இருக்கின்ற அந்த நிதியை அரசாங்கம் அந்தக் குற்றவாளிகளிடம் இருந்து அல்லது சந்தேக நபர்களிடம் இருந்து மீட்டெடுத்து மக்களின் அபிவிருத்திக்காகப் பயன்படுத்த வேண்டும். 

அண்மையில் உதய கம்மன்பில ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கின்றார் கடந்த காலத்தில் புத்தகம் வெளியிடுகின்ற ஒரு கலாசாரம் போய்க்கொண்டிருக்கின்றது. உதய கம்மன்பில புத்தகம் வெளியிடுகின்றார் என்றால் எங்களுக்கு ஒரு சந்தேகம் ஒன்று இருக்கின்றது. அதாவது உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முக்கியமான சூத்திரதாரி அதாவது கொல்லப்பட்டவர்கள்தான் முக்கியமான சூத்திரதாரிகள், அதாவது அந்தத் தற்கொலைக் குண்டுதாரிகள் என்று கதையை முடிக்கப்பார்க்கின்றார். இதிலிருந்து எங்களுக்கு விளங்குகின்ற விடயம் என்னவென்றால் முக்கியமான சூத்திரதாரிகளைக் காட்டிக் கொடுக்கக்கூடாது அல்லது சட்டத்தின் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தக்கூடாது என்பதற்காக இந்தப் புத்தகங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

இந்த அரசாங்கத்திடம் நாங்கள் மிகவும் ஒரு அன்பாகக் கேட்டுக்கொள்கின்ற விடயம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மூலமாக 269 இற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் வழிபாட்டுத் தலத்தலங்களிலேயே கொல்லப்பட்டிருக்கின்றார்கள். பல நூற்றுக்கணக்கான மக்கள் காயப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நிச்சயமாக அந்த மக்களுக்குரிய நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கியமான சூத்திரதாரிகளாக இருக்கின்றவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவர்களுக்குரிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும். அப்பாவி மக்களின் உயிர்களோடு விளையாடி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்புவது என்பது மிகவும் கேவலமான ஒரு நிலைமை. அதனை நிட்சயமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கியமான சூத்திரதாரிகள் கைது செய்யப்பட வேண்டும். 

அதேபோன்று கடந்த காலத்தில் எங்களுடைய மக்கள் பல விதத்திலும் பாதிக்கப்பட்டார்கள். காணாமலாக்கப்பட்ட மக்கள் என்ற ஒரு பட்டியல் இருக்கின்றது, அதற்கான நீதி கிடைக்க வேண்டும். இந்த அரசாங்கம் இனப்பிரச்சினை சம்பந்தமான விடயத்தில் இன்னும் கைவைக்கவில்லை. புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். 

இந்த அரசாங்கம் அதனைச் செய்து முடிக்குமாக இருந்தால் அது ஒரு சாதனையாக இருக்கும். அதனைச் செய்ய வேண்டும் என்று கேட்கின்றோம். 

இன்னும் அந்த இனப்பிரச்சினை என்பதைச் சாதாரண பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால் இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்று இவர்கள் நினைக்கின்றார்கள்;.  அது அப்படியல்ல. நிச்சயமாகப் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினை தீர்க்கப்படுமாக இருந்தால்தான் இலங்கைக்கு ஒரு எதிர்காலம் வாய்ப்பாக வசதியாக அமையும். என அவர் இதன்போது தெரிவித்தார்.


 

SHARE

Author: verified_user

0 Comments: