Showing posts with label விருச்சிகம். Show all posts
Showing posts with label விருச்சிகம். Show all posts
1 Feb 2019
1 Jan 2016
விருச்சிகம்
தன்னலமற்ற போக்கும், வழிநடத்திச் செல்லும் குணமும் கொண்டவர்களே! உங்களுடைய
ராசியிலேயே சனி அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால்
வேலைச் சுமை அதிகமாகிக்கொண்டே போகும். ஆரோக்கியத்தில் நீங்கள் அக்கறை
காட்டுவது நல்லது. எளிய உடற்பயிற்சிகளும் இந்த வருடம் முழுக்கத்
தேவைப்படும். வாய்வுப் பதார்த்தங்கள், அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
மே மாதத்தில் சிறு விபத்து வந்து நீங்கும். வருடம் பிறக்கும்போது
சூரியனும், புதனும் 2-ல் நிற்பதால் கம்பீரமாகப் பேசிக் காரியம்
சாதிப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைக்காவிட்டாலும் அவர்கள் மத்தியில்
கவுரவம் ஒரு படி உயரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பூர்வீகச்
சொத்தால் வருமானம் வரும். 01.01.2016 முதல் 07.02.2016 வரை அதிசாரத்தில்
மற்றும் 02.08.2016 முதல் வருடம் முடியும்வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு
லாப ஸ்தானத்தில் அமர்வதால் பணப் புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாகவும்,
கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையெல்லாம் திருப்பித் தருவீர்கள்.
தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம்
போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம்
அதிகரிக்கும். கண்டும் காணாமல் சென்றுகொண்டிருந்த சொந்தபந்தங்கள் வலிய
வந்து பேசுவார்கள். 08.02.2016 முதல் 01.08.2016 வரை குரு உங்கள் ராசிக்கு
10-ம் வீட்டில் அமர்வதால் தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படும். கடன்
அதிகமாகும். உத்தியோகத்தில் உங்கள் திறமையையும் உழைப்பையும் வேறு சிலர்
பயன்படுத்தி முன்னேறுவார்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு 12-ல்
நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று
நடத்துவீர்கள். சகோதர வகையில் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும்.
எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் ஏற்படும். 08.01.2016 முதல் ராகு 10-ம்
வீட்டிலும், கேது 4-ம் வீட்டிலும் அமர்வதால் வீட்டில் கூடுதலாக ஒரு அறை
அல்லது தளம் அமைக்கும் முயற்சி பலிதமாகும். உறவினர், நண்பர்களின் அன்புத்
தொல்லை குறையும். சிலர் சொந்தமாகத் தொழில் செய்யத் தொடங்குவீர்கள்.
தாயாருக்குச் சிறிய அளவில் அறுவை சிகிச்சை, கணுக்கால் வலி, நெஞ்சு வலி
வந்து போகும். அதிக வட்டிக்குக் கடன் வாங்க வேண்டாம். 27.02.2016 முதல்
09.09.2016 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் சனியுடன் சம்பந்தப்பட்டுப்
பலவீனமடைவதால் பணப் பற்றாக்குறை, சொத்துச் சிக்கல்கள், பழைய கடன் பற்றிய
கவலைகள், தூக்கமின்மை வந்து செல்லும். சாலைகளைக் கவனமாகக் கடக்கவும்.
வியாபாரத்தில் லாபம் உயரும். இந்த வருடம் தீர்வு காண்பதாகவும், ஒரளவு
நிம்மதி தருவதாகவும் அமையும்.