22 Apr 2026

ஐக்கிய ராஜ்யத்தின் பிரதமரின் பணிமனைக்கு முன்னால் நடைபெற்ற தியாக தீபம் அன்னை பூபதி அம்மாவின் நினைவு தினம்.

SHARE

ஐக்கிய ராஜ்யத்தின் பிரதமரின் பணிமனைக்கு முன்னால் நடைபெற்ற தியாக தீபம் அன்னை பூபதி அம்மாவின் நினைவு தினம். 

தியாக தீபம் அன்னை பூபதி அம்மாவின் 38 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ஐக்கிய ராஜ்யத்தின் பிரதமரின் பணிமனைக்கு முன்னால் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுள்ளது. 

தமிழீழ சுயநிர்ணய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் பல்வேறு தரப்பைச் சேர்ந்த தமிழர்கள், கலந்து கொண்டு அன்னை பூபதி அம்மாவின் தியாகத்தை நினைவு கூர்ந்தனர். மேலும், நீதி மற்றும் உரிமைக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

அன்னை பூபதி அம்மாவின் தியாகம் மறக்கப்படாது எனக் கூறி, தொடர்ந்து நீதி கிடைக்கும் வரை தங்களின் குரல் ஒலிக்கப் போவதாக இதன்போது கலந்து கொண்டிருந்தனவர்கள் தெரிவித்திருந்தனர்.








SHARE

Author: verified_user

0 Comments: