22 Apr 2026

மட்டக்களப்பு நாவற்குடா அருள்மிகு ஸ்ரீ கங்காணி பிள்ளையார் ஆலய வருடாந்த பிரம்மோற்சவ கொடியேற்ற திருவிழா.

SHARE

மட்டக்களப்பு  நாவற்குடா அருள்மிகு ஸ்ரீ கங்காணி  பிள்ளையார் ஆலய வருடாந்த பிரம்மோற்சவ கொடியேற்ற திருவிழா.

கிலக்கிலங்கையின்  பிரசித்தி பெற்ற  மட்டக்களப்பு ஸ்ரீ கங்காணி பிள்ளையார்  ஆலய  வருடாந்த உற்சவத்தின்  கொடியேற்ற திருவிழா புதன்கிழமை(22.04.2026) நண்பகள்  வெகுவிமர்சையாக நடைபெற்றது. 

வருடாந்த உற்சவத்தினை  முன்னிட்டு செவ்வாய்கிழமை விநாயகர் வழிபாடு கிராம சாந்தி வாஸ்து சாந்தி பந்தக்கால் நாட்டல் கிரியைகள் ஆரம்பமாகி நடைபெற்று புதன்கிழமை காலை  ஆலயத்தின் பரிபார மூர்த்தி களுக்கு விசேட பூஜைகள் இடம்பெற்றன.  

பெருமளவான அடியார்கள் பங்கு பற்றுதலுடன் அரோகரா கோஷம் முழங்க கொடிச்சீலை கொடி  கம்பத்து கருகே எடுத்துவரப்பட்டு பக்தி பூர்வமாக கொடியேற்ற நிகழ்வு நண்பகல் சுப வேளையில்  கொட்டகலை பிள்ளையார் ஆலய பிரதம குரு  சிவ ஸ்ரீ  கேதீஸ்வர பவித்திர குருக்கள் தலைமையில் இடம்பெற்றன. 

ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு தினசரி காலை 7 மணி மற்றும் மாலை 5 மணிக்கு நித்திய பூசை  இடம்பெற உள்ளத்துடன் தினசரி அபிஷேகம் பஞ்சமுக அர்ச்சனை வசந்த மண்டப பூஜை  தொடர்ந்து சுவாமி உள்வீதி வலம் வருதல் என்பனவும் இடம்பெற உள்ளன. 

மாம்பழத் திருவிழா எதிர்வரும் 28.04.2026 அன்று இடம்பெற உள்ளதுடன், 30.04.2026 அன்று  காலை 8 மணி அளவில் தேர் திருவிழா  இடம்பெறவுள்ளது. 

இவ் ஆலயத்தின் இறுதி திருவிழா 01.05.2026 அன்று நண்பகல் தீர்த்த உற்சவம்  இடம்பெற்று ஆலய திருவிழா இனிதே நிறைவடைய உள்ளது உள்ளது.

 










SHARE

Author: verified_user

0 Comments: