களுவாஞ்சிகுடி நகரில் அமைந்துள்ள எரிபொருள்
நிலையத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்..
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி நகரில் அமைந்துள்ள எரி பொருள் நிரப்பு நிலையத்தை குத்தகைக்குப் பெற்று நடாத்துபவருக்கு எதிராக அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக களுவாஞ்சிகுடி வர்த்தக சங்கத்தினர். இன்று திங்கட்கிழமை (22.06.2026) பிற்பகல் 3 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
களுவாஞ்சிகுடி நகரில் மிக நீண்டகாலமாக
இயங்கிவரும் இந்த எரிபொருள் நிலையத்தை குத்தகைக்குப் பெற்றவர் உரியமுறையில் நடாத்துகின்றார்
இல்லை. வருடத்தின் 365 நாட்களில் சுமார் 200 நாட்களாவது இந்த எரிபொருள் நிலையத்தில்
மண்ணெண்ணை முற்றாகவே இங்கு வழங்குவதில்லை, பெற்றோல், டீசல், இல்லை. என்றே கூறி எரிபொருள் நிலையத்திற்குள் உட்பிரவேசிக்காவண்ணம்
கயிறு கட்டி வைத்துள்ளார்கள்.
இந்த பிரதேசம் விவசாயம் மற்றும் மீன்பிடி உள்ளிட்ட தொழில்களைச் செய்கின்ற அதிகமக்கள் வாழ்கின்றார்கள், அதிகளவு அரச உத்தியோகஸ்த்தர்களும், முச்சக்கரவண்டிகளும் இயங்குகின்றன. அருகிலே தேசிய பாடசாலை, வைத்தியசாலை, வர்த்தக நிலையங்கள் என அமைந்துள்ளன இவ்வாறான நிலையில் இந்த எரிபொருள் நிலையத்தில் எப்போது சென்றாலும் பெற்றோல், டீசல் இல்லாத நிலமையே காணப்படுகின்றன.
நாட்டில் எரிபொருள் இல்லை என்றால் அது அரசாங்கம் பார்க்கின்ற பிரச்சனையாகும். நாட்டிலே எரிபொருள் இருந்தும் களுவாஞ்சிகுடி நகரில் அமைந்துள் எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் இல்லாத நிலமையே காணப்படுகின்றது.
எனவே அரசாங்கம் இந்த எரிபொருள் நிரப்பு
நிலையத்தை குத்தகைக்கு வழங்கியவரிடமிருந்து இதனை மீளப் பெற்று இதை 24 மணிநேரமும் வருடத்தின்
365 நாட்களும் எரிபொருள் வழங்கும் தகுதி உடையவருக்கு வழங்க வேண்டும். என இதன்போது ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
களுவாஞ்சிகுடி வர்த்தக சங்கம் ஏற்பாடு
செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், களுவாஞ்சிகுடி முச்சக்கரவண்டி சாரதிகள், பொதுமக்கள்
என பலரும் கலந்து கொண்டு பதாகைகளை எந்தியவாறு ஆர்;பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது களுவாஞ்சிகுடி பொலிசாரும்
இதன்போது கருகை தந்து ஆர்ப்பாட்டக்காரர்களிடம் விடையத்தை கேட்டறிந்தனர். பின்னர் மிக
விரைவில் இதற்கு தீர்வு கிடைக்கல்லலையாயின் மீண்டும் தாம் பாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளவுள்ளதாகத்
தெரிவித்து கலைந்து சென்றனர்.












0 Comments:
Post a Comment