மட்டக்களப்பில் இன்சிவ் குளோபல் நிறுவனத்தினரின்
Edu expo 2026.
மட்டக்களப்பில் இன்சிவ் குளோபல் நிறுவனத்தினரினால் வெளிநாடுகளில் உயர் கல்வியை பெற்றுக் கொள்வதற்கான Edu expo 2026 நிகழ்வானது இன்சிவ் குளோபல் (INSIV GLOBAL ) நிறுவனத்தின் பணிப்பாளர் சூரியமூர்த்தி ஹரீந்திரன் அவர்களின் தலைமையில் கிரின் கார்டன் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை(08.03.2026) இடம்பெற்றது.
இன்சிவ் குளோபல் (INSIVGLOBAL ) நிறுவனமானது வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ள மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமான விசா சேவையை வழங்கும் நம்பகமான பல வருட அனுபவம் வாய்ந்த நிறுவனமாகும்.
வடகிழக்கு மாகாணங்களில் உள்ள மாணவர்களை வெளிநாடுகளில் உயர் கல்விகளை பெற்றுக்கொள்வதற்கு வெளிநாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான நேரடி தொடர்பாடலை ஏற்படுத்தி உயர் கல்வி, பட்டப்படிப்பு, முதுமாணி, கலாநிதி பட்டங்கள் போன்ற உயர் கற்றல் செயற்பாட்டை மேற்கொள்வதற்கு தேவையான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களையும் இன்சிவ் குளோபல் நிறுவனமானது வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றது.
இவ்வருடத்திற்கான எடியு எக்ஸ்போ நுனர
நஒpழ நிகழ்வில் இன்சிவ் குளோபல் நிறுவனத்தின் பணிப்பாளரினால் வெளிநாடுகளில் உயர் கல்வி
தொடரவுள்ள மாணவர்களுக்கான தெளிவூட்டல்களை வழங்கியதுடன் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய
நாடுகளுக்குச் செல்லவுள்ள மாணவர்களுக்கு எதுவித கட்டணமும் இன்றி இலவச வழிகாட்டுதல்கள்
வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் உயர் கற்கைகள் தொடர்பாக ஸ்டடி.ரீச் (Study reach) பல்கலைக்கழக நாட்டுக்கான பணிப்பாளர் மேரியா ரிச்சட் கலந்து கொண்டு மாணவர்களுக்கான தெளிவூட்டல்களை வழங்கினார்.
மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இன்விவ் குளோபல் நிறுவனமானது தனது கிளையினை விரிவுபடுத்தி பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரபல சட்டத்தரணி திருமதி தர்ஷினி சுந்தரேசன் கலந்து கொண்டதுடன், வங்கி முகாமையாளர், இன்சிவ் குளோபல் நிருவன பணிப்பாளர்கள், பெற்றார்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.








0 Comments:
Post a Comment