7 Mar 2026

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் துறைநீலாவணையில் ஆங்கில பாலர் பாடசாலை திறந்து வைப்பு.

SHARE

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் துறைநீலாவணையில் ஆங்கில பாலர் பாடசாலை திறந்து வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் துறைநீலாவணையில் ஆங்கில மொழிமூல பாலர் பாடசாலை ஒன்று வெள்ளிக்கிழமை(06.03.2026) தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜின் திட்ட முன்மொழிவுக்கமைய  பிரதேச சபையின் அனுமதியுடன் நவீன வசதிகளுடன் இந்த ஆங்கில பாலர் பாடசாலை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதேபோற்ற ஆங்கில மொழிமூல பாலர் பாடசாலைகள் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் ஆரப்மிக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் சி.சிறிதரன், போரதீவுபற்று பிரதேச சபை தவிசாளர் வி.மதிமேனன் உள்ளிட்ட பலர் இதன்பொது கலந்து கொண்டிருந்தனர்.













SHARE

Author: verified_user

0 Comments: