20 Mar 2026

களுவாஞ்சிகுடி பகுதிக்கு திடீரென புகுந்த காட்டுயானை மக்களை பாதுகாக்க கழத்தில் இறங்கிய வன ஜீவராசிகளத்தினர் மயிரழையில் உயிர் தப்பினர்.

SHARE

களுவாஞ்சிகுடி பகுதிக்கு திடீரென புகுந்த காட்டுயானை மக்களை பாதுகாக்க  கழத்தில் இறங்கிய வன ஜீவராசிகளத்தினர்  மயிரழையில் உயிர் தப்பினர்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிகுடியில் மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து மக்கள் குடியிருப்புக்குள்ள தீடீரென் இன்று வெள்ளிக்கிழமை(20.03.2026) காலை காட்டு யானை ஒன்று புகுந்ததனால் அப்பகுதியில் மக்கள் மத்தியில் பெரும் களேபரம் ஏற்பட்டிருந்தது. 

திடீரென அப்பகுதி மக்கள் குடியிருப்புக்குள் இந்த காட்டு யானை உட்ர்குந்துள்ளதை அவதானித்த பிரதேச வாசிகள், வெல்லாவெளி பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் காட்டுயானையை அப்புறப்படுத்துவதற்கு உயிர் அச்சுறுத்துலுக்கும் மத்தியில் பல்வேறான  பிரயத்தனங்களை முன்னெடுத்திருந்தனர். 

எனினும் அப்பகுதி இளைஞர்கள் காட்டு யானையை தொந்தரவு செய்ய முயற்சித்த அதன் விளைவாக அந்த யானை களுதாவளை தேற்றாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம், ஆகிய கிராமங்களை ஊடறுத்து குருக்கள்மடம் களப்புப் பகுதிக்குச் சென்று அப்பகுதியில் உள்ள பற்றைக்காட்டில சஞ்சரித்துள்ளது. 

இதனிடையில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோஸ்தர்கள், பொதுமக்களை கட்டுப்படுத்தி வன ஜீவராசிகள் திணைக்களத்தினரின் பணியினை முன்னெடுக்க பாரிய ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர். 

இந்நிலையில் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் களுதாவளை பகுதியில் சில மணிநேரம் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.





 

SHARE

Author: verified_user

0 Comments: