போதைக்கு எதிராக களுவாஞ்சிகுடியில் துரித நடவடிக்கை.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட நகரப் பகுதிகளில் போதை பாவனைக்கு எதிரான செயற்பாடுகள் இன்று ( 02 .02.2025) மேற்கொள்ளப்பட்டன.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் உள்ள பொதுச் சந்தை மற்றும் பிரதான வீதியில் உள்ள கடைகள் போன்றவற்றிலே வெற்றிலை சப்பி மெல்லுவது, மது அருந்துவது, புகை பிடிப்பது, போன்றவற்றை தடுக்கும் வகையில் விழிப்பூட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பொதுமக்கள் இவ்வாறு மேற்கொள்வார்களாக இருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் காட்சிப்படுத்தப்பட்டு மக்களுக்கு விழிப்பூட்டப்பட்டன.
இன்று முதல் எவராயினும் இவ்வாறான போதை பாவனை செயற்பாடுகளிலே ஈடுபடுகின்ற போது பொது சுகாதார பரிசோதனை ஊடாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும். எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டன.
குறித்த செயற்பாட்டில் தவிசாளர் மே. வினோராஜ் அவர்களும் பொது சுகாதார பரிசோதகர் அவர்களும் பிரதேச சபையினுடைய உத்தியோகஸ்தர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டு மேற்படி விழிப்பூட்டல் சுவரொட்டிகளை காட்சிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.









0 Comments:
Post a Comment