களுவாஞ்சிக்குடி முகத்துவாரம் வெட்டப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி முகத்துவாரம் இன்று வெள்ளிக்கிழமை(09.01.2026) பிற்பகல் வெட்டப்பட்டுள்ளது.
அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கைகளுக்கமைய மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் முன்னின்று இம்முகத்துவாரத்தை வெட்டியுள்ளார்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் ஜே.சி.பி இயந்திரம் மூலம் முகத்துவாரம் வெட்டப்பட்டு, நீர் வடிந்தோடச் செய்யப்பட்டுள்ளன.
இந்த முகத்துவாரம் வெட்டப்படதன் மூலம்
களுவாஞ்சிக்குடி, ஒந்தாச்சிமடம், களுதாவளை, போன்ற பல கிராமங்களில் கரையோரப்பகுதிகளில் தேங்கியிருக்கும் வெள்ளநீர்
இதனூடாக வழிந்தோடுவதாக தவிசாளர் இதன்போது தெரிவித்தார்.




0 Comments:
Post a Comment