9 Jan 2026

மட்டக்களப்பில் தொடர்ந்து இடையிடையே மழை வானம் மப்பும் மந்தாரமுமாகவுள்ளது.

SHARE

மட்டக்களப்பில் தொடர்ந்து இடையிடையே மழை வானம் மப்பும் மந்தாரமுமாகவுள்ளது.

வடகீழ் பருவப்பெயற்சி மழைவீழ்சி மட்டக்களப்பு மாவட்டத்திலும் இடையிடையே பெய்து வருகின்றது. இதனிடையே தொடர்ந்து வானம் மேகமூட்டம் சூழ்ந்து காணப்படுவதோடு, மப்பும் மந்தாரத்துடனும் காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை அனர்த்தங்கள் ஏதும் இடம்பெறுமாக இருந்தால் உடன் செயற்படுவதற்காக மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்களும், தயர்படுத்தப்பட்டுள்ளன. இவற்றினைவிட இராணுவத்தினர், கடற்படை உள்ளிட்ட முப்படையினரும், தயர் நிலையில் உள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பானர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் புலிபாய்ந்தகல் பிரதான வீதியை ஊடறுத்து வெள்ள நீர்பாய்ந்து வருவதனால் அவ்வீதியுடனான தரைவளிப்போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன் அதில் படகுச் சேவை இடம்பெற்று வருகின்றது. 

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை(09.01.2026) காலை 8.30 மணி வரையில் கடந்த 24 மணித்தியாலத்தில் வாகனேரிப் பகுதியில் 45.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உன்னிச்சைப்  பகுதியில் 33.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 22.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கட்டுமுறிவுப் பகுயியில 23 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கல்முனைப் பகுதியில் 25.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வநிலைய அவதான நிலையம் தெரிவிக்கின்றது.

இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதான குளங்களின் நீர்ட்டங்களும் வெகுவாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில் உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 29அடி 3அங்குலம், நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 28அடி 8அங்குலம், தும்பங்கேணிக் குளத்தின் நீர்மட்டம் 15அடி 9அங்குலம், உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 14அடி ஒரு அங்குலம், வாகனேரிக் குளத்தின் நீர்மட்டம் 17அடி 5அங்குலம், கட்டுமுறிவுக் குளத்தின் நீர்மட்டம் 11அடி 6அங்குலம், கித்துள்வெவக் குளத்தின் நீர்மட்டம் 11அடி 7அங்குலம், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 15அடி 7அங்குலம், வடமுனைக்கு குளத்தின் நீர்மட்டம் 12அடி 6அங்குலம், உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்பாசனப் பொறியியாளர்கள் தெரிவிக்கின்றனர்.






























SHARE

Author: verified_user

0 Comments: