2 Dec 2025

அன்புருவான புத்தரின் சிலையை, ஆக்கிரமிப்பின் அடிப்படைக் குறியீடாக மாற்ற வேண்டாம் சிறிநேசன் எம்.பி

SHARE

அன்புருவான புத்தரின் சிலையை, ஆக்கிரமிப்பின் அடிப்படைக் குறியீடாக மாற்ற வேண்டாம் சிறிநேசன் எம்.பி

இந்து மதத்தைத் தாய் மதமாகக் கொண்ட சித்தார்த்தர்,பௌத்த மதத்தை உருவாக்கிக் கௌதம புத்தரானார். அவர்,பகுத்தறிவாத அறிவியல் மார்க்கமாக பௌத்த மதத்தை வடிவமைத்தார். 

இவர் அறவழி,அன்புவழி , அகிம்சை வழியை மக்களுக்குக் காட்டினார். அதனால்தான் புத்தரை அன்பே வடிவமானவர் என்று கூறுவர். அப்படியான அன்புமயமான புத்தரை இலங்கையில் ஆக்கிரமிப்பின் அடையாளமாகக் காட்டுவதற்கு,சில அடிப்படைவாத பௌத்தர்கள் மற்றும் அவர்களது அரசியல் வாதிகள் மற்றும் அடாவடியர்கள் முற்படுகின்றார்கள். அந்தகையில்தான், அண்மைமையில் திரு கோணமலைக் கடற்கரையின் ஒரு பக்கமாக நிறுவப்பட்ட புத்தர் சிலை காணப்படுகின்றது. 

என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்…. 

இதனை முதலில் தடுக்க முயன்ற பொலிசார் பின்னர், பௌத்த குருமார்களின் மேலாதிக்கத்துக்கு அடிபணிந்து விட்டார்கள் என்ற கருத்து வெளிவந்துள்ளது. 

அமைதியாக வாழும் தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்கள் மத்தியில் அடிப்படைவாதத்தை மீண்டும் விதைப் பபதற்கு, பேரினவாதிகள் துடிக்கின்றனர். இதன்  மூலம் மக்களைக் குழப்பி மீண்டும் ஊழல் மோசடிப் பேரினவாதிகளை மீண்டும் ஆட்சி மேடைக்குக் கொணடு வர விரும்புகின்றனர். 

இவ்விடயத்தில் இப்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதியாக செயற்பட வேண்டும். மேலும்,தொல்லியல் திணைக்களமானது தொல்லியல் என்றால், பௌத்த கலாசாரம் என்ற மனோநிலையில் செயல்படக்கூடாது. 

புத்தரின் மார்க்கத்தை ஏற்றுப் பல நாடுகள் வளர்ச்சி பெற்றுள்ளன. யப்பான் சீனா, தாய்லாந்து,தென்கொரியா போன்ற நாடுகள் இதற்கு உதாரணங்களாகும், ஆனால்,புத்தரைத்  பூசிப்பதாகக் கூறி ஜனனாயகத்தையும், மனிதவுரிவுமைகளை மிதித்த நாடுகளாக, இலங்கை,மியன்மார் ஆகிய இரு நாடுகள் உள்ளன.இந்த நாடுகள் அடிப்படை வாத பிற்போக்குவாதத்தால் மனித உரிமைகளை மதிக்காமல்,ஏனைய இன மக்களை ஒதுக்குவதிலும், ஒடுக்குவதிலும், அழிப்பதிலும் முனைப்பாகச் செயற்பட்டு வந்துள்ளன. இதனால், அன்பு வடிவான புத்தரை ஆக்கிரமிப்பின் அடையாளமாகக் காட்டுகின்றனர். 

இந்நிலையில், இலங்கை இனமுரண்பாடு, இனப்பகை, இனப்போரால் சீர்குலைந்து வங்குரோத்து நிலைக்குத் தள் ப்பட்டது.70 ஆண்டுகளில், இந்நிலை ஏற்பட்டும், பேரின அடிப்படைவாதிகள் திருந்தாமல் உள்ளனர். அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களை ஆக்கிரமித்தவர்கள் மட்டக்களப்பை ஆக்கிரமிப்பதில் முனைப்புக்காட்டுன்றனர் மட்டக்களப்பின் எல்லைக் கிராமமான வடமுனை நெடியகல் மலையில் பௌத்தர்கள் இல்லாத இடத்தில் பௌத்த வழிபாட்டுத் தலம் அமைக்கப்படுகின்றது.மயிலத்தனை மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.இவற்றைத் தேசிய மக்கள் சக்தியும் கண்டு கொள்ளவில்லை.இதுதான் பௌத்தத்தின் மேலாதிக்க நிலை என்பதைத் தமிழர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். 

இந்தியாவில் போர் வெறியோடு நின்ற அசோக சக்கரவர்த்தியை நேர் நெறியனாக்கி நல்ல பௌத்தனாக, உபகுப்தர் என்னும் பிக்கு மாற்றினார். இலங்கையில் நேர்நெறியில் வாழக்கூடியவர்களையும் போர் வெறியர்களாக மாற்றும் பிக்குகள் சிலரும் உள்ளனர்.இதுதான் நாட்டின் சாபக்கேடாக உள்ளது. என அவர் அதில் தெரிவித்துள்ளார்.



SHARE

Author: verified_user

0 Comments: