மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை
உறுப்பினர்களின் ஒரு மாத வேதனம் மலையக மக்களின் நிவாரணத்திக்கு.
எமது பிரதேச சபையில் அங்கத்துவம் வகிக்கின்ற தமிழரசு கட்சியோடு சேர்ந்து பயணிக்கின்ற உறுப்பினர்களாகிய நாங்கள் ஒரு மாதத்துக்குரிய வேதனத்தை மலையக மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வழங்குவதற்க நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம்.
என மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்துள்ளார். பிரதேச சபையினால் களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைத் தொகுதியில் அமைக்கப்படவிருக்கும் கடைத் தொகுதிக்கு அடிக்கல் நடும் நிகழ்வு செவ்வாய்கிழமை(02.12.2025) நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
2025.06.12 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக்
கட்சி மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையைக் கைப்பற்றிய பின்னர்
இலங்கையிலே எந்தவித உள்ளுராட்சி மன்றங்களும் மேற்கொள்ளாத பாரிய அளவிலான அபிவிருத்திகளையும் மக்களின் பல தேவைகளையும் ஒரு உள்ளுராட்சி மன்றமாக எமது மண்முனை தென் எருவில் பற்று உள்ளுராட்சி மன்றம் செயற்பட்டு வருகின்றது.
இந்த புதிய அரசாங்கத்தினால் நடாத்தப்பட்ட உள்ளுராட்சி மன்ற தேர்தலிலே நாங்கள் இந்த உள்ளுராட்சி மன்றத்தை பொறுப்பேற்றுதன் பின்னர் எமது பிரதேச சபையும், ஆரியம்பதி பிரதேச சபையும் இக்குறிப்பட்ட காலத்திற்குள் அதிகளவு சேவைகளை நாம் மக்களுக்கு செய்துள்ளோம். இவ்வாறு நாம் அதிகளவு சேவைகளை மக்களுக்கு வழங்கியதன் காரணமாக உள்ளுராட்சி மாகாண சபை அமைச்சினால் எமது பிரதேச சபைக்கு 12.5 மில்லியன் நிதி வழங்கியுள்ளது அதேபோல் ஆரையம்பதி பிரதேச சபைக்கும் இவ்வாறாறு நிதியை அரசாங்கம் வழங்கியுள்ளது.
அப்பணத்தையும் மேலும் எமது பிரதேச சபையில் உள்ள நிதியையும் பயன்படுத்தி சுமார் 26 மில்லியன் ரூபாய் செலவில் கழுவாஞ்சிகுடி பொதுச்சந்தை வளாகத்தில் புதிதாக கடைத் தொகுதி ஒன்றை அமைக்கவுள்ளோம். அக்கடைத் தொகுதியில் 24 கடைகள் அமையப் பெற உள்ளன.
களுவாஞ்குடியில் அமைந்திருக்கின்ற பொதுச் சந்தை பட்டிருப்பு தொகுதியின் ஒரு வர்த்தக கேந்திர நிலையமாகும் சுமார் 250000 இற்கு மேற்பட்ட மக்கள் வந்து செல்லும் இடமாகும்.
அதுபோல் எவ்வாறான அனர்த்தங்கள் வந்தாலும் மக்களுக்காக நாங்கள் முன்னின்று செயற்பட்டு வருகின்றோம். மக்களுக்குரிய வாழ்வாதார மற்றும் உதவி திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகின்றோம்.
தற்போதைய நிலையில் மலையக மக்கள் பெருமளவு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள், அவர்களுக்குரிய உலர் உணவுப் பொருட்களை எமது பிரதேச மக்கள் குழுக்களாக ஒன்றிணைந்து சேகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றார்கள்.
நிலையில் எமது பிரதேச சபையில்அங்கத்துவம் வகிக்கின்ற தமிழரசு கட்சியோடு சேர்ந்து பயணிக்கின்ற உறுப்பினர்களாகிய நாங்கள் ஒரு மாதத்துக்குரிய வேதனத்தை மலையக மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வழங்குவதற்க நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம். எமது முடிவுக்கு ஏற்றவாறு எமது சபையில் இருக்கின்ற ஏனைய மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் அவர்களுடைய ஒரு மாத வேதனத்தை வழங்கலாம் என நாம் கோரிக்கை விடுப்போம் அவர்கள் விரும்பினால் அவர்களுடைய பணத்தினையும் தந்தால் நாங்கள் ஏற்றுக் கொண்டு அதனை சேர்த்து சுமார் 4 லட்சத்துக்கு மேற்பட்ட பணத்தொகையை உலர் உணவு பொருட்களை கொள்வனவு செய்து வழங்குவதற்காக உள்ளோம்.
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment