2 Dec 2025

கல்முனை குருந்தயடி தொடர்மாடியில் குடியிருப்புக்கு மட்டக்களப்பிலிருந்து வவுசர்கள் மூலம் குடிநீர் வினியோகம்.

SHARE

கல்முனை குருந்தயடி தொடர்மாடியில் குடியிருப்புக்கு மட்டக்களப்பிலிருந்து வவுசர்கள் மூலம் குடிநீர் வினியோகம்.

அம்பாறை மாவட்டம் கல்முனை குருந்தயடி தொடர்மாடிக் குடியிருப்பிருக்கு மக்கள் கடந்த ஐந்து நாட்களாக நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக மின்சாரம் தடைபட்ட நிலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், மற்றும் போரதீவுபற்று பிரதேச சபை தவிசாளர் விமலநாதன் மதிமேனன், ஆகியோரிடம் இலங்கை தமிழரசு கட்சியின் கல்முனை தொகுதி தலைவர் .நிதான்சன் மற்றும் கல்முனை வடக்கு ஆதா வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்திய அதிகாரி கு.சுகுணன் ஆகியோர் விடுத்த வேண்டுகோளுக்கமைய மண்முனை தென் எருவில் பற்று மற்றும் போரதீவுபற்று பிரதேச சபைகளின் வவுசர்கள் மூலம் சுமார் 21000 லீட்டர் குடிநீர் திங்கட்கிழமை மாலை(01.12.2025) வழங்கி வக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் சுமார் 300 குடும்பங்களை சேர்ந்த மக்கள் இக்குடிநீர்  வசதி வழங்கப்பட்டுள்ளது. 

தாம் வெள்ள அனர்த்த வேளையில் பாதிப்புற்று குடிநீருக்கு  ஐந்து நாட்களாக  இன்னலுறுவதாகதாக அறிந்தவுடன் அயல் மாவட்ட மக்களாகிய எமக்கு குடிநீர் தந்துதவிய மட்டக்களப்பு மாவட்டத்iதாச் சேர்ந்த பிரதேச சபைகளுக்கும் அதன் தவிசாளர்களுக்கும் தமது நன்றியைத் தெரிவித்துக்  கொள்வதாக கல்முனை குருந்தயடி தொடர்மாடியில் குடியிருக்கும் மக்கள் தெரிவித்தனர்.

 







SHARE

Author: verified_user

0 Comments: