மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்திற்குள்
நுழைந்த 20 மேற்பட்ட காட்டு யானைகள் - விரைந்து செயற்பட்ட ஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்.
இதனால் அப்பகுதியிலுள்ள மக்களின் பயன்தரும் தென்னை, வாழை, உள்ளிட்ட பயிரினங்களையும் காட்டுயானைகள் துவம்சம் செய்து வருவதாகவும் அங்குள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது இவ்வாறு இருக்க சனிக்கிழமை(27.12.2025) அப்பகுதியைச் சூழ சுமார் இருபதிற்கு மேற்பட்ட காட்டுயானைகள் உலாவித்திரிந்ததனால் மக்கள் பீதிடைந்தநிலையில் காணப்பட்டனர்.
இந்நிலையில் அங்குள்ள மக்கள் விடுத்த கோரிக்கைக்கு வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகஸ்த்தர்கள் அப்பகுதிக்கு விரைந்து அப்பகுதி மக்களுடன் இணைந்து காட்டு யானைக் கூட்டத்தை விரட்டுவதற்கு எடுத்த முயற்சியின் பலனாக பல்வேறு பிரேயத்தனங்களுக்கு மத்தியில் பாதுகாப்பாக காட்டுயானைகள் வனப்பகுதிக்குள் அனுப்படுத்தியுள்னர்.
எனினும் காட்டுயானைகள் மக்கள் குடியிருப்புக்களுக்குள் உள்நுளையாமலிருப்பதற்காக வேண்டி அங்குள்ள காட்டுயானைகளை நிரந்தரமாக அப்புறப்படுத்தி, யானைப் பாதுகாப்பு வேலிகளை அமைப்பதற்கு அதிகரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment