21 வருட காலமாக கவனிப்பாரற்று காடு மண்டிக் காணப்பட்ட வீதியைச் செப்பனிட நடவடிக்கை.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஒந்தாச்சிமடம், கோட்டைக்கல்லாறு பெரியகல்லாறு போன்ற கிராமங்களை கரையோரமாக இணைக்கும் பாதை 21 வருடங்களாக கவனிப்பாரற்ற நிலையில் காணப்பட்டிருந்தது. இவ்வீயைச் செப்பனிடும் பணி திங்கட்கிழமை(29.12.2025) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பெரியகல்லாறு மீனவர் சங்கம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளருக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைய இவ்வாறு காடு மண்டிக் காணப்பட்ட 1.5 கிலோமீட்டர் நீளமுடைய இவ்வீதியின் புனரமைப்பு பணிகளை இதன்போது தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் ஆரம்பித்து வைத்தார்.
தாம் பிடிக்கும் மீன்களை 1.5 கிலோமீட்டருக்கும் மேல் மீன்களை கூடைகளில் சுமந்து கொண்டுதான் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றோம். இதுவரைகாலமும் இவ்வீதியைச் செப்பனிட்டுத் தருமாறு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், என பலரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வந்தோம். அது எமக்கு கைகூடவில்லை. இந்நிலையில்தான் நாம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைத் தவிசாளருக்கு இக்கோரிக்கையை முன்வைத்திருந்தோம். அவ்வாறு எமது கோரிக்கை முன்வைக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள்ளேயே இவ்வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்காக தவிசாளருக்கு தமது நன்றியைத் தெரிவிப்பதாக அப்பகுதி மீனவர் சங்கத்தினர் இதன்போது தெரிவித்தனர்.
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment