ஆளும் கட்சி சில பிரதேச சபை உறுப்பினர்கள்
அரசாங்கத்திற்கு அகௌரவத்தையும் இழிவான பெயரையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றார்கள் -
பிரதேச சபைத் தவிசாளர்.
தேசிய ரீதியில் அரசாங்கம் எடுக்கின்ற சில விடயங்கள் சிறந்ததாக இருந்தாலும் பிரதேச சபையில் அங்கம் வைக்கின்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளால்தான் என்.பி.பி அரசாங்கத்திற்கு அகௌரவத்தையும் இழிவான பெயரையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றார்கள்.
என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்ததுள்ளார். பிரதேச சபையில் இன்று வியாழக்கிழமை(20.11.2025) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
இன்றைய தினம் எமது பிரதேச சபையின் ஆறாவது சபையமர் நடைபெற்றது. இதன்போது தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பான விடயங்களும் எடுத்துக் கொள்ளப்பட்டன. அந்த வகையில் இப்பிரதேச மக்களின் கோரிக்கைக்கு இணங்க ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் மூடுவதாகவும் எனினும் கல்வி பொதுத் தர சாதாரண தரம், உயர்தரம் கற்கின்ற மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமைகளிலும் அவர்களுக்கு உரிய பகுதிநேர வகுப்புகளை நடத்தலாம் எனவும் நாம் முடிவெடுத்திருந்தோம்.
அந்த வகையில் தனியார் கல்வி நிலையங்களில் உயர்தரம் படிக்கின்ற மாணவர்களுக்கு ஒன்றரை மணிக்கு காலங்களுக்கு 100 ரூபாவும், அதற்கு கீழ் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு மணித்தியாலத்திற்கு 50 ரூபாவும், தனியார் கல்வி நிலையங்கள் அறவிட வேண்டும் எனவும் நாங்கள் தெரிவித்திருந்தோம்.
அதற்காக வேண்டி உப விதி ஒன்றையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
எமது பிரதேசத்தில் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமின்றி அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். அதற்காக வேண்டிதான் இத்திட்டத்தை நாங்கள் ஏக மனதாக பிரதேச சபையில் கொண்டு வந்திருந்தோம்.
இந்த நிலையில் எமது சபையிலே ஐந்து கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றார்கள். இன்றைய தினம் எமது ஆறாவது கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் எதிர்க்கட்சியிலே இருக்கின்ற உறுப்பினர்கள் எமது கூட்டத்தைக் குழப்பி எமது சட்ட திட்டங்களை குழப்புகின்ற வகையில் நடந்து கொண்டார்கள். பிரதேச சபை சட்டத்தின் அடிப்படையில் சுயேச்சைக் குழுவில் ஊசி சின்னத்திலே எமது பிரதேச சபையிலே உறுப்பினராக இருக்கின்ற ஒரு உறுப்பினருக்கு எதிராக அவர் ஒரு மாத காலத்திற்கு இந்த பிரதேச சபையில் நடைபெறுகின்ற கூட்டத்திற்கு சமூகம் கொடுக்க முடியாது பிரேரணையைக் கொண்டு வந்திருந்தோம். அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
அவருக்கு எதிராக கொண்டு வந்த பிரேரணை 11 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்தது. அந்த வகையில் அவர் சபையில் இருந்து வெளியேறினார். அவர் வெளியேறியவேளை அவருடன் சேர்ந்து ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து வெழிநடப்பு செய்து சபை அமர்வை விட்டு வெளியேறினர்.
பின்னர் தொடர்ச்சியாக நாம் எமது சபை நடவடிக்கைகளை முன் கொண்டு பல தீர்மானங்களை நிறைவேற்றி இருந்தோம்.
அந்த வகையில் இவ்வாறு சபை நடவடிக்கை முன்கொண்டு
செல்கின்ற வேளையில் உறுப்பினர்கள் யாராவது வெழிநடப்பு செய்தால், அல்லது வெளியேறினால்
அவர்களுக்கு உரிய கொடுப்பனவுகளை வழங்குவதில்லை. என்ற தீர்மானத்தையும் நாம் இதன் போது
நிறைவேற்றி இருந்தோம்.
மக்கள் எம்மை தெரிவு செய்து பிரதேச சபைக்கு அங்கத்தவராக அனுப்பியதன் நோக்கம் பிரதேசத்தில் இருக்கின்ற கல்வி நடவடிக்கைகளை சிறப்புற முன்கொண்டு செல்ல வேண்டும். பிரதேச சபையின் ஊடாக பிரதேசத்தில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். பிரதேச சபையில் எடுக்கப்படும் தீர்மானங்களை சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் போன்ற பல விடயங்களை முன்வைத்து மக்களின் தெரிவு செய்து அனுப்பி இருக்கின்றார். இவைகளை செய்ய வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது.
ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களை மூடி அறநெறி கல்வியை போதிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். எமது செயற்பாடுகளை மேற்கொண்டதன் விளைவாக இம்முறை களுவாஞ்சிகுடி அறநெறிப் பாடசாலையிலிருந்து 21 மாணவர்கள் தேசிய ரீதியில் வெற்றி பெற்றிருக்கின்றார்கள்.
ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்கள் இயங்குவதற்கு நாம் ஒருபோதும் சோரம்போக முடியாது பிரதேசபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் கல்வி நிலையங்கள் இயங்கச் செய்ய வேண்டும் என தேசிய மக்கள் சக்தியை கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் எமது பிரதேச சபையில் அங்கம் வகிக்கின்ற உறுப்பினர் ஒருவர் எழுத்து மூலமாக கோரிக்கை முன் வைத்திருக்கின்றார். இது எமக்கு வேதனை அளிக்கின்றது.
தூய்மையான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என அரசாங்கம் தெரிவிக்கின்ற இந்த நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற பிரதேச சபை உறுப்பினர்கள் ஏனைய எதிர்க் கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து தோளோடு தோளாக ஒன்றாக பயணிக்கின்றார்கள் என்பது கவலையான விடயமாகும். தேசிய ரீதியில் அரசாங்கம் எடுக்கின்ற சில விடயங்கள் சிறந்ததாக இருந்தாலும் பிரதேச சபையில் அங்கம் வைக்கின்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளால்தான் என்.பி.பி அரசாங்கத்திற்கு அகௌரவத்தையும் இழிவான பெயரையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றார்கள். என அவர் இதன்போது தெரிவித்தார்.
இதன்போது பிரதேச சபையின் உப தவிசாளரும்
கருத்துத் தெரிவித்தார்.
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment