6 Oct 2025

கருத்து வெளியிடுகின்றவர்களை பிடிக்காது விட்டால் அவர்களை அழிக்கின்ற செயற்பாடு கடந்த காலத்தில் இடம்பெற்றிருக்கின்றது – சிறிநேசன் எம்.பி

SHARE

கருத்து வெளியிடுகின்றவர்களை பிடிக்காது விட்டால் அவர்களை அழிக்கின்ற செயற்பாடு கடந்த காலத்தில் இடம்பெற்றிருக்கின்றது – சிறிநேசன் எம்.பி

கடந்த காலத்தில் அரை கலைய போராட்டம் ஒன்று நாட்டிலே இடம்பெற்று இருந்தது அதன் மூலமாக ஆட்சி மாற்றத்திற்குரிய அடித்தளம் போடப்பட்டிருந்தது. அதற்கு இந்த சமூக ஊடகங்களே பங்களிப்புச் செய்திருந்தன. இந்நிலையில் நிகழ்நிலை காப்புச் சட்டம் என்று பார்க்கின்ற போது வோல்டேரின் கருத்தின் படி “உனது கருத்தினை எதிர்க்கின்றேன் ஆனால் உனது கருத்து வெளியிடும் சுதந்திரத்தினை பாதுகாப்பதற்காக எனது உயிரையும்கூட விடுவதற்கு தயாராக இருக்கின்றேன்" எனப்பபுதின்றது. ஆகவே கருத்துக்கள் வெளியிடப்படல்தான் வேண்டும் அது எம்மை ஆதரிக்கின்றவையாகவும், எதிர்கின்றவையாகவும், இருக்கலாம் அதனை ஏற்றுக் கொள்வதும் சகித்துக் கொள்வதும் கட்டாயத் தேவையாக இருக்கின்றது. ஆனால் கருத்து வெளியிடுகின்றவர்களை பிடிக்காது விட்டால் அவர்களை அழிக்கின்ற செயற்பாடு கடந்த காலத்தில் இடம்பெற்றிருக்கின்றது. 

என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். 

சமூக ஊடக பிரகடனம் 2.0 சமூக ஊடக பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு, ஜனநாயக மதிப்புகள் தொடர்புடைய சிக்கல்கள் தொடர்பான விழிப்புணர்வு உருவாக்கும் திட்டம் மட்டக்களப்பு - கல்லடி தனியார் விடுதியில் சனிக்கிழமை(04.10.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் இலட்சுமணன் தேவஅதிரன் தலைமையில் நடைபெற்ற இ;ந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

இதுவரையில் இந்த நாட்டிலே 45 ஊடகவியலாளர்கள் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டமைக்காக உயிரை கொடுத்திருக்கின்றார்கள். அதில் குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் கிட்டத்தட்ட 28 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள், சந்திரிகாவின் ஆட்சி காலத்தில் சுமார் 14 ஊடகவியலாளர்களும் ஜே.ஆர்.ஜெயவர்த்தன மற்றும் பிரேமதாசவின் ஆட்சிக் காலங்களிலும் ஊடகவியலாளர்கள் இவ்வாறு கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் நிகழ்லை காப்பு சட்டத்தை நாங்கள் எடுத்து பார்க்கின்ற போது சில மட்டுபாடுகள், கட்டுப்பாடுகள், இருக்கத்தான் வேண்டும்.  சில விமர்சனங்களை பார்க்கின்ற போது நூற்றுக்கு நூறு வீதம் பொய்யானவையாகவும் இருக்கின்றன. சிலர் வெளியிடுகின்ற கருத்துக்களுக்கும் உண்மை தன்மைக்கும் எந்தவித தொடர்புகளும் இருக்கமாட்டாது. அந்த சந்தர்ப்பத்தில் நாம் பார்க்கின்றோம் இந்த சமூக ஊடகங்கள் மிகவும் மோசமான கருத்துக்களை பரப்புகின்றன என்பது பற்றி நாம் யோசிக்கின்றோம்.

மறுப்புரம் மிகவும் அறிவியல் ரீதியாக விமர்சிக்கின்ற சமூக ஊடகங்களும் இருக்கின்றன. அவை மிகவும் நாகரிகமான முறையில் தமது விமர்சனங்களை செய்து கொண்டிருக்கின்றன. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும்கூட இந்த சமூக ஊடகங்கள் பெரும் பங்களிப்பு செய்திருக்கின்றன. மோசமான ஆட்சி நாட்டை வங்ரோத்து நிலைக்கு கொண்டு சென்ற ஆட்சியை மாற்றி அமைப்பதற்கு சமூக ஊடகங்கள் பங்களிப்பு செய்திருந்தன. 

தங்களுடைய அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக தங்களுக்கு துதி பாடுகின்ற ஊடகங்களாக சிலர் ஊடகங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள். அறிவியல் ரீதியாக, முற்போக்கு ரீதியான, செயல்படுகின்ற ஊடகங்கள்தான் தற்காலத்தில் அவசியமாக காணப்படுகின்றன. அந்த அடிப்படையில்தான் நிகழ்நிலை காப்புச் சட்டம் என்பது மதி நுட்பமாக  செயல்படுகின்ற பிள்ளைகளை தட்டி கேட்கின்ற, சுட்டிக் காட்டுகின்ற, நிலையில் அந்த ஊடகங்கள் செயல்படுகின்றபோது அவற்றின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதும், மட்டுப்படுத்துவதும், அந்த ஊடகங்களை அழிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாகும். 

அம்மணமாக சில விடயங்களை விமர்சனம் செய்யும் ஊடகங்கள் இருக்கின்றன. நிர்வாணமாக கருத்துக்களை நோகடிக்கின்ற சில சமூக ஊடகங்களில் கருத்துக்களைப் பரப்புகின்ற பிரதிநிதிகள் காணப்படுகின்றார்கள். அவர்கள் ஊடகங்களுக்குரிய, ஊடகவியலாளர்களுக்கு உரிய பண்புகள் அற்றவர்களாக காணப்படுகிறார்கள். அவ்வாறானவர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் செய்யத்தான் வேண்டும். அவ்வாறானவர்களின் கருத்துக்களால் உளவியல் ரீதியான தாக்கங்களும் ஏற்படுத்தப்படுகின்றன. 

எனவே எனது பார்வையில் அறிவார்ந்த ரீதியான முற்போக்கு ரீதியான மக்களை சரியான பாதைக்கு கொண்டு செல்லக்கூடிய ஆட்சியாளர்களின் கபட நாடகங்களை கவனமாக கையாளுகின்ற ஊடகங்கள் சமூக ஊடகங்கள் தேவையா இருக்கின்றது.

கைது செய்யப்பட்டு இருக்கின்ற சம்பத் மனம்பேரி என்றவர் ஒரு புலனாய்வாளர், ஒரு குறித்த கட்சியின் உறுப்பினராக இருந்திருக்கின்றார், ரவிராஜ் அவர்களின் கொலையில் சம்பந்தப்பட்டிருக்கின்றார், ஒரு முக்கிய முன்னாள் அமைச்சரின் இணைப்புச் செயலாளராக இருந்திருக்கின்றார், போதை வஸ்து முக்கிய வர்த்தகராகவும் இருந்திருக்கின்றார், அதனோடு பாதாள உலகம் கோஷ்டியோடும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. அவர் பல பாத்திரங்களை இவ்வாறு வகித்திருக்கின்றார். இவ்வாறு இளைஞர்களை கடந்த கால ஆளும் வர்க்கத்தினர் தங்களுடைய தேவைகளுக்காக பயன்படுத்தி இருக்கின்றார்கள். இறுதியில் அவர்களுடைய தேவை முடிந்ததும் அவர்களை விட்டு இருக்கிறார்கள் இவாறு இளைஞர்களை தவறாகவும் தப்பான தேவைகளுக்காகவும் பயன்படுத்திவிட்டு தங்களுக்கு மாறாக உண்மைகளை சொல்லப் போகின்றார்கள் என்றால் அவர்களை விட்டு விடுகின்ற அல்லது கொன்றொழிகின்ற கலாசாரம் காணப்பட்டிருக்கிறது. 

சில சமூக ஊடகங்களை பார்க்கின்றபோது நாங்கள் ஊகித்துக் கொள்கின்ற விடயங்கள் உண்மைகளாக வெழி வருகின்றன ஆனாலும் பலர் கனவான்கள் போன்றும் பெரிய மனிதர்களாகவும் மதிக்கப்படுகின்றவர்கள் பாதாள உலகம் கோஷ்டிகளுடன் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். 

பாதாள உலகம் கோஸ்ட்டியின் பணிப்பாளர் யார், ஈஸ்டர் குண்டு தாக்குதலின் இயக்குனர் யார், இவ்வாறாணவர்கள் சம்பவங்களில் பலர் பிடிபட்டிருக்கின்றார்கள். எனவே நிகழ்நிலைக்காப்புச் சட்டத்தை கடந்து உண்மைகளை சமூக ஊடகங்கள் வெளிக்கொணர வேண்டும். சிலர் அரசுக்கு துதி பாடுகின்ற ஊடகங்களாக இருக்கின்ற போது அவர்களுக்கு சம்பளம்தான் கிடைக்கின்றன. ஆனால் சில ஊடகங்கள் துணிந்து நின்று இவ்வறான பல விடயங்களை வெளிப்படுத்தி விடுகின்றார்கள். அவ்வாறான ஊடகங்களுக்கு நிச்சயமாக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். 

நேர்கணியமான, நேர்த்தியான விடயங்களை வளர்க்கக்கூடிய விதத்திலும் எதிர் கணியமான தன்மைகளை களைய கூடிய விதத்திலும் இந்த ஊடகங்கள் செயல்படுகின்ற பொழுது அந்த ஊடகங்களை பாதுகாக்க வேண்டும். 

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் அரசினால் கொண்டுவரப்படுகின்ற மக்களுக்கு எதிரான விடயங்களுக்கு எதிர்த்து நின்று வருகின்றது. அதுபோல் உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம், என்பனவும் செயற்பட்டு வருகின்றன. 

ஊழல் மோசடிகள், கொலை, கொள்ளை, கப்பம், இவ்வாறான செயற்பாடுகளுக்கு நாங்கள் உண்மையில் எதிர்க்கின்றோம். ஆகவே இவ்வாறான விடயங்களுக்கு கருத்துக்களை கூறுகின்ற பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதற்கான கொலையாளிகள் யார் என்பதை மக்கள் அறிந்து இருந்தும்கூட காவல்துறை சிலவேளை கண்டும் காணாமல் இருக்கின்றது. 

இந்த அரசாங்கத்தில் ஓரளவு நாம் பார்க்கின்றோம் மறைந்திருந்தவர்களை பலர் வெளிக்கொணரப்பட்டு வரப்படுகின்ற. கடத்தல் கொள்ளை கப்பம் கேட்டவர்களைகூட சமூக ஊடகங்கள் தங்களது உயிரைக்கூடத் துச்சமென வைத்துக் கொண்டு வெளி கொண்டு இருக்கின்றார்கள். எனவே நிகழ் நிலை காப்பு சட்டம் என்பது இருட்டில் கிடக்கின்ற உண்மைகளை வெளிச்சத்தை கொண்டு வருகின்ற ஊடகங்களின் போக்குகளை கடைசிவரையிலும் இச்சட்டம் ஊடாக ஆப்பு வைக்கின்ற அல்லது சுருக்கு போடுகின்ற நிலைக்கு செல்லக்கூடாது. 

அதனை யார் செய்தாலும் எந்த கட்சி செய்தாலும் பிற்போக்கான விடயங்களை அசுர பலத்தோடு இருக்கின்ற ஊடகங்கள் செயற்பட வேண்டும். மேலும் ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய விதத்தில் அமையக்கூடாது. நல்ல விடயங்கள் நல்ல பண்புகள் ஜனநாயகத்தை தெழிவூட்டுகின்ற பண்புகளை உடையவர்கள் அம்மணமான ஆபாசமான கருத்துக்களை வெளியிடுகின்ற சில கொச்சை ஊடகங்கள் இருக்கின்றன. இவ்வாறான கருத்துக்கள் களையப்பட்டு நல்ல விடயங்களை புகுத்தப்பட்டு நிகழ்நிலை காப்பு சட்டம் அமைய வேண்டும். அதற்காக எந்தவிதமான தயக்கம் இன்றி பாராளுமன்றத்தில் நாங்கள் குரல் எழுப்புவோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.


 

SHARE

Author: verified_user

0 Comments: