6 Oct 2025

கடந்த காலங்களில் தவறான கருத்துக்களை மக்களுக்கு கொண்டு சேர்த்து கலவரங்கள் இந்த நாட்டிலே இடம்பெற்றிருக்கின்றன –பிரபு எம்.பி

SHARE

கடந்த காலங்களில் தவறான கருத்துக்களை மக்களுக்கு கொண்டு சேர்த்து கலவரங்கள் இந்த நாட்டிலே இடம்பெற்றிருக்கின்றன –பிரபு எம்.பி

கடந்த காலங்களில் தவறான கருத்துக்களை மக்களுக்கு கொண்டு சேர்த்து அவை மக்களுக்கு பரப்பப்பட்டு கலவரங்கள் குழப்ப சூழ்நிலைகள் இந்த நாட்டிலே இடம்பெற்றிருக்கின்றன. கருத்து தெரிவிக்கும் போது அதன் உண்மை தன்மை அது சரியானதா என்பதை அவதானித்து சிந்தித்து செயல்பட வேண்டியுள்ளது.

என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார். 

சமூக ஊடக பிரகடனம் 2.0 சமூக ஊடக பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு, ஜனநாயக மதிப்புகள் தொடர்புடைய சிக்கல்கள் தொடர்பான விழிப்புணர்வு உருவாக்கும் திட்டம் மட்டக்களப்பு - கல்லடி தனியார் விடுதியில் சனிக்கிழமை(04.10.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் இலட்சுமணன் தேவஅதிரன் தலைமையில் நடைபெற்ற இ;ந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பில் சமூகத்திலேயே ஒருவர் அவரின் தனி உரிமை சார்ந்த விடயங்களில் கருத்தில் கொள்ள வேண்டும் நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போன்று சட்டங்களிலும் நன்மை தீமைகள் இருக்கின்றன. இந்த இரண்டு விடயங்களையும் கருத்தில் கொண்டுதான் சட்டங்கள் இயற்றப்படுகிறன. அந்த வகையில் நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் மற்றும் கருத்துக்களை வெளியிடுகின்றவர்கள் தொடர்பிலும் அவர்களை பாதுகாப்பு தொடர்பாகவும் சிறந்த கருத்துக்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கின்ற விடயங்கள் தொடர்பிலும் கருத்துக் கொள்ள வேண்டும். 

கடந்த காலங்களில் தவறான கருத்துக்களை மக்களுக்கு கொண்டு சேர்த்து அவை மக்களுக்கு பரப்பப்பட்டு கலவரங்கள் குழப்ப சூழ்நிலைகள் இந்த நாட்டிலே இடம்பெற்றிருக்கின்றன. கருத்து தெரிவிக்கும் போது அதன் உண்மை தன்மை அது சரியானதா என்பதை அவதானித்து சிந்தித்து செயல்பட வேண்டியுள்ளது. 

சில சமூக ஊடகங்களில் நாங்கள் பல கருத்துக்களை அவதானித்திருக்கின்றோம். எம்மைகூட தவறானதாக சமூக ஊடகங்களில் சித்தரித்து காட்டப்படுகின்றன. அவ்வாறாக அந்த ஊடகங்களை பயன்படுத்துகின்றவர்கள் உண்மையான தகவல்களை சேகரித்துக் கொண்டு கருத்துக்களை வெளியிட வேண்டும். 

தனி நபரின் உரிமைகளையும், தனி நபரின் கருத்துக்களையும், பாதுகாக்க வேண்டும். ஏதோ ஒரு தனி நபர் அவ்வாறான கருத்துக்களை பாதிக்கப்படாத வகையில் அவர்களையும் பாதுகாக்க வேண்டிய நிலைமை இருக்கின்றது. சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றவர்கள் அது தொடர்பான தெளிவை பெற்றுக் கொள்ள வேண்டும். 

ஒருவருக்குரிய சுதந்திரம் என்பது இன்னும் ஒருவரின் மூக்கு நுனி வரைக்கும்தான் அமைந்திருக்கின்றது. அதனை கடந்து செல்லாமல் நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எனவே சமூக ஊடகங்கள் தொடர்பான சட்டம் தொடர்பில் அரசாங்கம் மக்களின் கருத்துக்களையும் அறிந்துதான் நாங்கள் அதனைக் கொண்டு வருகின்றது. 

எனவே சட்டம் தொடர்பில்லாத கழிவுகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கு இந்த முயற்சியினை மேற்கொண்டிருக்கின்ற மாற்றிக்கொள்கைகளுக்காகன அமைப்பு மற்றும் கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம் போன்றவற்றிற்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என அவர் இதன்போது தெரிவித்தார்.


 

 

SHARE

Author: verified_user

0 Comments: