குருக்கள்மடம் பாடசாலை கட்டடத்தில் இயங்கி
வருகின்ற இராணுவ முகாம் அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறன –
சாணக்கியன் எம்.பி.
குருக்கள்மடம் கிராமத்திலே பொது நிகழ்வுகளை நடாத்துவதற்குரிய கலாசார மண்டபம் இல்லை, குருக்கள்மடம் கிராமத்தின் பழைய பாடசாலையில் அமைந்திருக்கின்ற இலங்கை இராணுவ முகாமை அகற்றதல், அத்தோடு குருக்கள்மடம் பொது மயானத்துக்கு செல்கின்ற பிரதான வீதி புனரமைப்பு போன்ற வேலைத்திட்டங்களை பூர்த்தி செய்து தருமாறு மக்கள் என்னிடம் கோரிக்கையை முன் வைத்திருந்தார்கள்.
அதில் ஒரு கோரிக்கையை என்னால் கடந்த காலத்தில் பூர்த்தி செய்து கொடுக்க முடிந்திருந்தது. எனினும் இந்த மக்கள் என்னிடம் எடுத்த இரண்டாவது கோரிக்கையாக உள்ள குருக்கள்மடம் பாடசாலை கட்டடத்தில் இயங்கி வருகின்ற இராணுவ முகாம் அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறன. என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகத்தின் மாபெரும் மின்னொளி கரப்பந்தாட்ட சமரின் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்;கிழமை (05.10.2025) இரவு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் கழக தலைவர் நா.பிரியதர்சன் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது அட்டாளைச்சேனை கோல்ட் ஸ்ட்டார் விளையாட்டு கழகம் முதலிடத்தையும், குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகம் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்து கொண்டிருந்தார்.
இதன் போது வெற்றியீட்டிய அணிகளுக்கு கேடயங்களும், பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது பாராளுமன்றங உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்…
குருக்கள்மடம் இராணுவ முகாமை அகற்றுவது தொடர்பில் நாம் ஜனாதிபதியுடன் மூன்று தடவைகள் இது தொடர்பில் பேசியிருக்கின்றோம் இங்கு அமைந்திருக்கின்ற ராணுவத்தினருடன் எனக்கு எது வித கோபங்களும் இல்லை குறுக்கல்மடம் கிராமத்திலே இருக்கின்ற மைதானத்தை விஸ்தரிக்க வேண்டும் அதன் அறிக்கையை அமைந்திருக்கின்ற பாடசாலை கட்டிடத்தில் கட்டடத்திலேயே இருக்கின்ற ராணுவ முகாமை இருக்கின்ற பாடசாலை கட்டிடத்தை மீட்டெடுக்க வேண்டும் அதில் அருகில் இருக்கின்ற சிறுவர் பூங்காவை புனலகத்தில் செய்ய வேண்டும் போன்ற காரணத்தால் அதிலே அமைந்திருக்கின்ற ராணுவத்தினரை அகற்றுமாறு கூறுகின்றோம் தவிர மாறாக அங்கிருக்கின்ற ராணுவத்தினிடம் எங்களுக்கு எது வித கோபங்களும் இல்லை.
இந்த விடயம் குறித்து ஜனாதிபதி கடந்த பாதுகாப்பு அமைச்சு தொடர்பான நடைபெற்ற கூட்டத்திலேயே உரையாடி இருக்கின்றார். அதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற குருக்கள்மடம் இராணுவமுகாம், பாலையடிவட்டை இராணுவமுகாம், முறக்கொட்டாஞ்சேனை இராணுவமுகாம், காயங்கேணி இராணுவமுகாம் ஆகிய நான்கு இடங்களில் இருக்கின்ற ராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் ஒரு மாத காலம் இடைவெளி தருமாறு ஜனாதிபதியும் கேட்டிருக்கின்றார். இந்நிலையில் முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அகற்றப்பட்டுள்ளது.
எனினும் தாங்கள்தான் இராணுவ முகாம்களை அகற்றுவதற்காக குரல் கொடுத்ததாக பலர் வந்து தற்போது கருத்துத் தெரிவித்துக் கொண்டிருப்பது வேடிக்கையாக உள்ளது. அது எனக்கு பிரச்சனை இல்லை இது எவ்வாறு இருந்தாலும் இராணுவ முகாம் அகற்றப்பட்டால் போதுமானது. என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment