கல்விக்கான புனித போரை உருவாக்கியிருக்கின்றோம். - தென் எருவில் பற்று பிரதே சபையின் தவிசாளர் வினோராஜ்.
கல்விக்கான புனித போர் ஒன்றை உருவாக்கியிருக்கின்றோம். மாணவர்கள் அனைவரும் என் சகோதரர்கள் எந்த பிரச்சனையாக இருந்தாலும் கூறுங்கள் என்னால் முடிந்த சகல உதவிகளையும் செய்து தருகின்றேன் என மண்முனை தென் எருவில் பற்று பிரதே சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மாங்காடு பொது நூலகத்தின் ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு செட்டிபாளையம் சிறுவர் இல்லத்தில் புத்தக கண்காட்சி புதன்கிழமை(29.10.2025)நடைபெற்றது.
இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்….
இதன்போது பல்வேறு வகையான நூல்கள் காட்சிப் படுத்தி வைக்கப்பட்டதுடன், மாணவர்கள் பலரும் பார்வையிட்டனர்.
இதன் போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், மற்றும் சிறுவர் இல்ல நிர்வாகத்தினர், சிறுவர் இல்லத்தின் மாணவர்கள், எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…எமது மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் அனைத்து மாணவர்களும் எந்த வித கொடுப்பனவுகளுமின்றி மாணவர்கள் விரும்பிய ஆசிரியர்களிடம் தமது பகுதிநோரக் கற்கை நெறியைத் தொடரவேண்டும். அந்த கல்விச் செயற்றிட்டத்திற்காக நான் முன்னின்று செயற்பட்டு வருகின்றேன்.
காசு கொடுத்து கல்வியை வளர்க்கக்கூடாது காசு இல்லாமல் எமது மாணவர்களுக்கு ஏழை பணக்காரர் என்னிறல்லாமல் சரி சமமான முறையில் அனைவருக்கும் கல்வியை பெற்றுக் கொடுக்க வேண்டும். என்பதுதான் எமது நோக்கமாகும். அதற்காக வேண்டி எமது பிரதேசத்திற்குபட்பட்ட 12 பாடசாலைகளில் 20 ஆயிரம் மாணவர்களுக்கு 4 ஆம் தரத்திலிருந்து உயர் தரம் வரைக்கும் எதுவித கொடுப்பனவுகளுமின்றி பகுதி நேரக் கற்றலை முன்னெடுக்கவுள்ளோம். அதன் முதற்கட்டமாக அண்மையில் நாம் துறைநீலாவணையில் இச்செயற்றிட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.
இதுதான் எமது கல்விக்கான புனிதப் போராகும். இதில் எதுவித அரசியல் நோக்கமுமின்றி அந்த அந்த பகுதியிலுள்ள கற்ற சமூகத்தை முன்னிலைப்படுத்தி அவர்களினூடாகவேதான் இப்பணியைச் செய்வதற்குத் திட்டமிட்டுள்ளோம்.
நாம் வாழும் காலத்திற்குள் மாணவர்களுக்கு எந்த தேவைகள் இருந்தாலும் அதனை நிவர்த்தி செய்து தருவது எமது பொறுப்பு. தமிழர் சமூகத்திற்கு தற்போது எதுவுமில்லை. தற்போது இருப்பது கல்வி மாத்திரமேதான். எனவே எதிர்காலத்தில் எமது பகுதிகளிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் எமது தமிழ் மக்கள் தலைமை பீடங்களை எதிர்காலத்தில் ஏற்று இப்பகுதி மக்களுக்கு அனைத்து வேலைகளையும் தங்கு தடையின்றி மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் எமது எதிர்கால எதிர்பார்ப்பாகும் என தவிசாளர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 Comments:
Post a Comment