30 Oct 2025

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு திட்டம் மட்டக்களப்பிலும் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

SHARE

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு திட்டம் மட்டக்களப்பிலும் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்திற்கு அமைய போதைப்பொருள் அனர்த்தத்தை தோற்கடிக்கும் நோக்கில்முழு நாடுமே ஒன்றாக" எனும் தேசிய செயற்பாட்டுத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் அங்குரார்ப்பணம்  செய்துவைக்கப்பட்ட நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை(30.10.2025) இடம்பெற்றது.

போதைப்பொருள் அனர்த்தத்தை தோற்கடிக்கும்முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்பாட்டின் பிரதான அங்குரார்ப்பண நிகழ்வு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. 

அதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. 

இதன்போது ஜனாதிபதி அவர்களின் விசேட உரை நிகழ்நிலை ஊடாக இதன்போது காண்பிக்கப்பட்டதுடன்  போதைப் பொருள் அற்ற தேசத்தை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில்  உத்தியோகத்தர்களினால் சத்தியப்பிரமான நிகழ்வு இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், பொலிஸ் திணைக்கள உயரதிகாரிகள், முப்படை அதிகாரிகள், அரச திணைக்களங்களின் உயரதிகாரிகள், மாவட்ட செயலக உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.









SHARE

Author: verified_user

0 Comments: