30 Oct 2025

பெரும்போக நெற்பயிர் செய்கை ஆரம்பத்திற்கு முன்னர் காட்டுயானைகளை வனப்பகுதிகளுக்குள் துரத்தும் பணி ஆரம்பம்.

SHARE

பெரும்போக நெற்பயிர் செய்கை ஆரம்பத்திற்கு முன்னர் காட்டுயானைகளை வனப்பகுதிகளுக்குள் துரத்தும் பணி ஆரம்பம்.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பல நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் பெரும் போக நெற் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில் உள்ளதால் வயல் நிலங்களில் தஞ்சமடைந்துள்ள காட்டு யானைகளை துரத்தி வனப்பகுதிக்குள் அனுப்பும் பணி புதன்கிழமை (29.10.2025) வெல்லாவெளி பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அமைய வெல்லாவெளி பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி எஸ்.பிரசாந்த் தலைமையில் விவசாயிகள் பெரும் போக நெற் பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்கி கொடுக்கும் நோக்கிலும், நீண்ட காலமாக நிலவி வரும் காட்டு யானைகள் அச்சறுத்தல் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கிலும் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள் தெரிவிக்கின்றனர். 














இந்நிலையில் மிகவும் உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வெல்லாவெளி பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் காட்டு யானைகளை துரத்தும் பணியின் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


SHARE

Author: verified_user

0 Comments: