1 Oct 2025

மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற முதியோர் தின நிகழ்வு.

SHARE

மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற முதியோர் தின நிகழ்வு.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருக்கள்மடம் பொது நூலக வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் குருக்கள்மடம் முதியோர் இல்லத்தில் புதன்கிழமை(01.10.2025) முதியோரை மகிழ்விக்கும் முகமாக முதியோர் தின நிககழ்வு கலைவாணி வாசகர் வட்டத்தின் தலைவர் சி.சதானந்தம் தலைமையில் நடைபெற்றது. 

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் கலந்து கொண்டிருந்தார். 

இதன் போது குருக்கள்மடம் பொதுமக்கள், வாசகர் வட்ட உறுப்பினர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்ததுடன், முதியோரை மகிழ்விக்கும் பல்வேறு நிகழ்வுகளும் இதன்போது ஆற்றுகை செய்யப்பட்டன.









SHARE

Author: verified_user

0 Comments: