ஐந்து வருடம் பாராளுமன்ற உறுப்பினர்களாக
இருந்தவர்களின் ஓய்வூதியம் இரத்து செய்யப்படும்
- அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ.
30 வருடங்களாக அரசு சொத்துக்களையும், இடங்களையும், பாவித்து கொண்டிருந்த தலைவர்கள் அவர்களுடைய சொந்த வீடுகளுக்கு போய்க் கொண்டிருக்கின்றார்கள். ஐந்து வருடம் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் அவர்களுக்கு கிடைக்கின்ற ஓய்வூதியம் இரத்து செய்யப்படும். அது சம்பந்தமாக தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.
என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை(18.09.2025) மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியில் புதிய தபாலக காரியாலயத்திற்கான அடிக்கல் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் பல அபிவிருத்தி திட்டங்களை நாம் ஆரம்பித்து வைத்திருந்தோம். சுகாதாரத் துறைக்கு 700 மில்லியனுக்கு அதிகமான தொகையை நாம் ஒதுக்கீடு செய்திருக்கின்றோம்.
கடந்த எட்டு வருடங்களாக தபால் திணைக்களத்திற்கு எந்த விதமான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை. அத்திணைக்களத்துக்கு வாகனங்கள் இல்லை, தொழில்நுட்ப சாதனங்கள் இல்லை, அத்தனைகளத்தில் வேலை செய்த உத்தியோகஸ்தர்களின் பிரயத்தனத்தின் மத்தியத்தில் பெயரில்தான் இந்த அளவுக்கு அத்திணைக்களத்தை தக்க வைத்திருக்கின்றார்கள்.
தபால் திணைக்களத்திற்கு 35 வருடங்கள் கடக்கின்றன. அத்திணைக்களத்தினர் அளப்பரிய சேவையினை செய்து கொண்டிருக்கின்றார்கள். இத்திணைகளத்தினை பொறுத்தவரையில் ஒரு புதிய தொழில்நுட்பம், புதிய நடைமுறையை, செயற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. தனியார் துறையோடு போட்டி போடும் நிலைமை உருவாகி இருக்கின்றது. நாட்டிலே 3500 தபால் காரியாலயங்கள் அமைந்துள்ளன. வேறு எந்த திணைக்களங்களில் இவ்வாறு விஸ்தரிக்கப்பட்ட சேவை கிடையாது. கடந்த வரவு செலவுத் திட்டத்தில் 600 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. களுவாஞ்சி குடிப்பிரதேசத்திலும் நான் அறிந்த வகையில் 35 வருடத்திற்கு பின்னர் ஒரு தபால் காரியாலயத்திற்குரிய புதிய கட்டகம் ஒன்று அமைய இருக்கின்றது. ஒதுக்கீடு செய்யப்பட்ட 600 மில்லியன் ரூபா நிதியில் 30 மில்லியன் நிதி இந்த களுவாஞ்சிகுடி தபால் காரியத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வருகின்ற டிசம்பர் மாதம் இந்த தபால்காரியாலயம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும். இந்த பிரதேசத்தில் இருக்கின்ற. ஒன்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இந்த தபால் காரியத்தினூடாக நன்மை பெறவுள்ளார்கள். இதைத்தவிர 250 உப தபால் காரியலயங்களை நவீன மயப்படுத்துவதற்காக வேண்டி மேலதிகமாக தபால்திணைக்களத்திற்கு 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தபால்திணைக்களத்தில் போக்குவரத்து பெரியதொரு குறைபாடாக காணப்படுகின்றது. அதற்காக வேண்டி லொறி, மற்றும் கெப் வாகனங்கள் வாங்குவதற்கும் 320 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது தவிர தபாலகங்களை நவீனம் பயன்படுத்துவதற்காக வேண்டி லெப்டாப்டொப், சோலார் பவர், போன்றன கொள்வனவு செய்வதற்காக வேண்டியும் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
தபால் காரியாலயங்களில் வேலை செய்கின்ற தற்காலிக ஊழியர்கள் நிரந்தர நியமனங்கள் வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தபால் ஊழியர்களின் கொடுப்பனவுகள் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக வேண்டி அவர்களுடைய கொடுப்பணைகளையும் நாங்கள் ஏப்ரல் மாதத்தில் அதிகரித்திருந்தோம். அடுத்த இரண்டாம் கட்டமாக எதிர்வரும் டிசம்பர் மாதம் அடுத்த கொடுப்பனவு அதிகரிப்பை மேற்கொள்ளவுள்ளம் இவ் வருடம் முடிவுறும் நிலையில் தபால் ஊழியர்களின் வேதனம் அதிகரித்து காணப்படும்.
தபால்திணைக்களத்தில் காணப்படும் இவ்வாறான குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொடுக்கும் பட்சத்தில், சந்தையில் காணப்படுகின்ற ஏனைய நிறுவனங்களுடன் போட்டி போட்டு சிறந்த சேவையை வழங்கி லாபகரமாக இந்த திணைக்களத்தை இட்டுச் செல்லலாம்.
ஜனாதிபதி அவர்கள் நாட்டை பொறுப்பேற்று ஒரு வருடத்தை கடக்கின்ற இந்த நிலையில் நாட்டில் அதிக அளவு மாற்றங்கள் நடைபெற்று இருக்கின்றன. அது மக்களுக்கு விளங்கி இருக்கின்றது. நாங்கள் இந்த நாட்டைப் பொறுப்பேற்கின்றபோது நாடு வாங்குறோம் அடைந்த நிலையிலே காணப்பட்டிருந்தது. ஆனால் இப்போது மத்திய வங்கி உள்ளிட்ட பல நிறுவனங்களை பார்க்கின்றபோது டொலரின் மற்றும் முதலீடுகள் பெருகி இருக்கின்றன.
பொருளாதாரம்
வீழ்ச்சி அடையும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாஸ, அவர்களும் எதிர்க்கட்சியினரும் தெரிவித்திருந்தார்கள். எங்களுடைய செயற்பாடுகள்
காரணமாக இந்த பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கின்றது. என்பதை நாங்கள் மக்களுக்கு காட்டி
இருக்கின்றோம்.
இந்த பொருளாதார முன்னேற்றம் அடைந்ததனால் நாங்கள் இன்னும் நிதிகளை அபிவிருத்திகாக ஒதுக்கீடு செய்வதற்கு தயாராக இருக்கின்றோம். இது மக்களுடைய வாழ்வாதாரத்தையும் பொருளாதரத்தை அடுத்த கட்டத்திற்கு முன்ன நகர்த்தி கொண்டு செல்லும். அதே போல் மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் மாற்றத்தையும் நாங்கள் மேற்கொண்டு இருக்கின்றோம்.
முன்னைய காலத்தைப் போன்று பாதுகாப்பு படையணி இல்லாமல், வாகன பேரணி இல்லாமல் அமைச்சர்கள் சாதாரணமாக வந்து செல்கின்றார்கள. 30 வருடங்களாக அரசு சொத்துக்களையும், இடங்களையும், பாவித்து கொண்டிருந்த தலைவர்கள் அவர்களுடைய சொந்த வீடுகளுக்கு போய்க் கொண்டிருக்கின்றார்கள். ஐந்து வருடம் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் அவர்களுக்கு கிடைக்கின்ற ஓய்வூதியம் இரத்து செய்யப்படும். அது சம்பந்தமாக தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. அது தொடர்பில் நீதிமன்றத்திலும் அனுமதி எடுத்து இருக்கின்றோம். விரைவில் அதற்குரிய சட்டமூலம் வர இருக்கிறது.
நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த அரசியல் மாற்றத்திற்கு எனக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்களும் சந்தோஷப்படுகிறார்கள் இந்த மாற்றத்திற்கு விருப்பம் இல்லாமல் இருப்பவர்கள் இந்த வரப்பிரசாதங்களை பெற்றுக் கொண்டிருந்த அரசியல்வாதிகள் மாத்திரம்தான் விருப்பம் இல்லாமல் இருக்கின்றார்கள்.
பாதாள உலகம் குழுக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களுடைய வங்கி கணக்குகளும் பரிசோதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. அதற்குரிய சட்ட நடவடிக்கைகளும் நடக்கப்படுகின்றன. ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற பின்னர் பொது தேர்தலும், உள்ளுராட்சி மன்ற தேர்தலும் நடைபெற்றன. இந்த இரண்டு தேர்தல்களிலும்; எந்தவித அரசியல் தலையீடுகள் இன்றியும் நடைபெற்றிருந்தன. யாரும் தேர்தல்களில் போட்டியிட்டு அவர்களுடைய நிலையை அறியக்கூடிய நிலைமையை நாங்கள் உருவாக்கி இருந்தோம்.
ஜனாதிபதி அவர்கள் நாட்டைப் பொறுபேற்ற பின்னர் ஏற்கனவே இருந்த இனவாதம், மதவாதம், ஒழிக்கப்பட்டு இருக்கின்றன. முஸ்லிம், சிங்களம், தமிழ், என்ற பேதம் இன்றி அனைவரும் ஜனநாயக வழியில் ஒன்றுபட்டு இருக்கின்றார்கள். இனவாதம், மதவாதம், தொடர்பான செயற்பாடுகளை எந்த ஒரு நபர்களுக்கும் நாம் இடம்மளிக்கப் போவதில்லை. அவ்வாறு செயற்பாடுகளில் ஈடுபடுவார்களாக இருந்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த நாட்டிலே ஒரு புதிய மாற்றத்தை உண்டு
பண்ணுவதற்காக இந்தப் பிரதேசத்திலே 30 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து புதிய
தபாலக காரியாலயத்திற்கு நாங்கள் அடிக்கல் நாட்டியிருக்கின்றோம். எனவே ஒரு புதிய யுகத்தை
உருவாக்குவதற்காக அனைவரும் ஒன்று சேர்ந்து பயணிப்போம். என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment