18 Sept 2025

மட்டக்களப்பு மாவட்டத்தில் மும்முரமாக முன்னெடுக்கப்படும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன - பிரபு எம்.பி

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தில் மும்முரமாக முன்னெடுக்கப்படும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன  - பிரபு எம்.பி

35 ஆண்டுகளுக்குப் பின்னர் களுவாஞ்சிகுடியில் இந்த தபால்  நிலையத்திற்குரிய புதிய கட்டடம் அமைய இருக்கின்றது. கடந்த காலங்களிலே பல ஆட்சியாளர்கள் இந்த பிரதேசங்களிலே அமைச்சர்களாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சுக்களுக்கு அல்லது அரசாங்கத்திற்கு துணை போகின்றவர்களாகவும், பங்களிளாகவும், இருந்து வந்திருக்கின்றார்கள். ஆனால் இந்த தேவையை முன்வந்து அதற்கான முயற்சியினை மேற்கொள்ளாமை இருந்தது உண்மையிலே கவலை அளிக்கின்ற விடயமாக உள்ளது. 

என தேசிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார். களுவாஞ்சிகுடியில் வியாழக்கிழமை(18.09.2025) நடைபெற்ற தபாலக கட்டடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் அவர் தெரிவிக்கையில் 

ஆனாலும் இன்றைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 76 வருடங்கள் இந்த நாட்டிலே ஆட்சி செய்த ஆட்சியாளர்களில் இருந்து மாறுபட்டு ஒரு அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தியாக இந்த நாட்டு மக்களின் தெரிவு செய்திருந்தார்கள். எமது இந்த முதலாவது காலகட்டத்திலேயே இவ்வாறான தேவைகளை அறிந்து அதற்குரிய நிதி விடுவிப்புகளை செய்து அதனை உடனடியாக செயற்படுத்தும் விதமாக நாங்கள் இந்த செயறிட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம். 

இன்றைய தினம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு தேவையான விடயங்கள் பலவற்றை நிவர்த்தி செய்து இருந்தோம். அது போன்றுதான் இந்த களுவாஞ்சிகுடியில் இன்றைய தினம் இந்த தபால் காரியாலயத்திற்கு புதிய காரியாலயத்துக்குரிய அடிக்கல் நடப்பட்டு இருக்கின்றது. கடந்த காலங்களில் யுத்த பாதிப்புக்கு உள்ளானது இந்த பிரதேசம் இந்த களுவாஞ்சிகுடி பிரதேசத்தை அண்மித்துள்ள படுவாங்கரை பிரதேச மக்களிடத்திலும் பல தேவைகள் இருக்கின்றன. அவ்வாறான மக்களின் தேவைகளுக்கு நாங்கள் முன்னுரிமை வழங்கி எமது விடயங்களை நாங்கள் செயற்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

 

மிக விரைவில் இப்புதிய கட்டடத்தை மக்கள் பாவனைக்கு விடப்படும். எமது பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மும்முரமாக முன்னெடுக்கப்படும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன குறிப்பாக அமைச்சர்கள் மாவட்டத்திற்கு வருகை தந்து மக்களின் தேவைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளையும் நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். அதுபோல் இன்னும் பல விடயங்களையும் இந்த மாவட்ட மக்களுக்காக நாங்கள் மேற்கொள்வதற்காக காத்திருக்கின்றோம். தொடர்ச்சியாக மக்கள் ஆதரவு பெற்ற ஒரு அரசாங்கமாக எமது தேசிய மக்கள் சக்தி சங்கம் திகழும் என்பதை நாம் தெரிவித்துக் கொள்கின்றேன். என அவர் இதன்போது தெரிவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: