மாணவர்களுக்கான விவாத மேடை நிகழ்வு.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து நடாத்தும் “உலகை அறிவோம் எனும் தலைப்பிலான விவாத மேடை" நிகழ்வின் இரண்டாம் கட்டம் வியாழக்கிழமை(04.09.2025) பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எஸ்.சசிதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
இந்த விவாத நிகழ்வில் “நவீன விஞ்ஞான தொழில்நுட்பத்தால் கலாசாரம் எழுச்சியடைகின்றது மற்றும் எழுச்சியடையவில்லை" எனும் தலைப்பில் மாணவர்கள் தங்கள் வாத, பிரதிவாதங்களை முன்வைத்திருந்தனர்.
இவ்விவாத நிகழ்வு மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 5 பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் 12 மாத வேலைத்திட்டத்தின் கீழ் இடம்பெறும் இவ்விவாத நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர், அலுவலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வின் நடுவர்களாக ஓய்வு பெற்ற அதிபர், எழுத்தாளர் கே.நாகேந்திரன் மற்றும் கதிரவன் பட்டிமன்ற பேச்சாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி யு.நர்மதா அவர்களும் பணியாற்றியிருந்தனர்.
இந்த நிகழ்வை ஆசிரியர் திருமதி டி.அனோஜா
மற்றும் பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாலும்,
ஒருங்கிணைப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment