பதவி உயர்வு பெற்று இடமாற்றம் பெற்றுச்
செல்லும் மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம்.சுபியான் கௌரவிப்பு.
மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளராகப் பதவி வகித்து வந்த எம்.பி.எம்.சுபியான் பதவி உயர்வு பெற்று கிழக்கு மாகாண சபைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதையிட்டு தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்ட பெவ்ரல் அமைப்பினரும், மார்ச்-12 அமைப்பினரும் இணைந்து அவரை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை(02.09.2025) மாலை இடம்பெற்றது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்திலிலுருந்து கடந்த 4 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றியமைக்காகவும், தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றியமைகாகவும், அவர் பெவ்ரல் அமைப்பிலிருந்து தேர்தல் கண்காணிபுக்களில் ஈடுபட்டவர்களால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இதன்போது கடந்த தேர்தலிகளில் பெவ்ரல் அமைப்பிலிருந்து தேர்தல் கண்காணிபுக்களில் ஈடுபட்டவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம்.சுபியான் சான்றிதழ்களை இதன்போது வழங்கி வைத்தார்.
இதன்போது பெவ்ரல் தேர்தல் கண்காணிப்பு
அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ.சொர்ணலிங்கம், மார்ச்-12 அமைப்பின்
மாவட்ட இணைப்பாளர் ப.சேதீஸ்வரி, மற்றும் தேர்தல் கண்காணிப்புக்களில் ஈடுபட்டவர்களும்
கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment