24 Sept 2025

கரையோர சுத்தப்படுத்துகை மற்றும் பனம் விதை நடுகை செய்யும் நிகழ்வு.

SHARE

கரையோர சுத்தப்படுத்துகை மற்றும் பனம் விதை நடுகை செய்யும் நிகழ்வு.

கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாகவும்,  கிழக்கு மாகாண ஆளுனரின் “கிழக்கு கரையோரங்களை தூய்மையாக பேணுதல்" எனும் செயற்பாட்டின் ஓர் அங்மாகவும், கரையோரப் பிரதேசங்களை சுத்தம் செய்யும் வேலைதிட்டம் மற்றும் பனம் விதை நடுகை செய்யும் நிகழ்வு புதன்கிழமை(2025.09.24) மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ஸ்ரீதரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் அக்ககுதி கடற்கரைப் பிரதேசங்களில் இடம்பெற்றது.

இதன் போது மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவின் குருக்கள்மடம் தொடக்கம் பெரியகல்லாறு வரையான கரையோர பிரதேசங்கள் சுத்தம் செய்யப்பட்டதுடன், அந்த பிரதேசங்களில் ஏற்படும் மண்ணரிப்பை தடுக்கும் முகமாக பனம் விதைகளும் நடுகை செய்யப்பட்டன.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சத்யகௌரி தரணிதரன், பிரதேச சபை தவிசாளர் மே.வினோராஜ், சுற்றாடல் உத்தியோகத்தர்கள், கடல் சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு படையினர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வுகளை பிரதேச செயலக கரையோரம் பேணல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஆ.ஜெயரூபன் மற்றும் யோ.நிசந்தராசன் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.












 

SHARE

Author: verified_user

0 Comments: