1 Sept 2025

எம்மிடம் மூக்கை நுளைக்க வேண்டாம் ஆளும் கட்சி அமைப்பாளருக்கு போரதீவுப் பற்றுப் பிரதேச தவிசாளர் ஆலோசனை.

SHARE

எம்மிடம் மூக்கை நுளைக்க வேண்டாம் ஆளும் கட்சி அமைப்பாளருக்கு போரதீவுப் பற்றுப் பிரதேச தவிசாளர் ஆலோசனை.ஒரு சில கட்சியின் அமைப்பாளர்கள் எமது போரதீவுப் பறிறு பிரதேச சபையின் ஊடாக நடைபெறுகின்ற வேலைத்திட்டங்களுக்கு தாங்களும் ஒரு பங்குதாரர்கள் வரவேண்டும் என எத்தனிக்கின்றார்கள். அந்த கட்சிகளின் அமைப்பாளர்களின் கடந்த கால வரலாறுகளை எடுத்துப் பார்த்தால், மட்டக்களப்பு கல்லடியில் இருக்கின்ற ஒரு அமைப்பாளர் எமது போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்கு வருகை தந்து எமது சபையின் ஊடாக முன்னெடுக்கப்படும் வேலைகளில் அவர்களும் பங்கேற்க வேண்டும் என முனைகின்றார். என மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் வி.மதிமேனன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தின் கீழ் போரதீவுபற்றுப்  பிரதேசத்தில் அமைந்துள்ள முனைத்தீவு கிராமத்தின் தளபத்து வீதியைப் புனரமைக்கும் பணிகள் திங்கட்கிழமை(31.08.2025) போரதீவு பற்று பிரதேச சபை தவிசாளர் வி.மதிமேனன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

210 மீற்றர் நீளமுடைய கிறவல் வீதியாக காணப்பட்ட இவ்வீதி 40 இலட்சம் ரூபா செலவில் கொங்கிறீட் வீதியாக புனரமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. 

இவ்வீதிப் புனரமைப்பு நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள், கிராமிய சமூக அமைப்புகள், எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் 

குறித்த அமைப்பாளர் மக்களால் தேர்வு செய்யப்பட்டு எமது பிரதேசத்திற்கு வந்து சேவை செய்வதற்கு நாங்கள் பூரணமாக இடம் வழங்குகின்றோம். மக்களால் தேர்வு செய்யப்படாமல் வெறுமனே அமைப்பாளராக மாத்திரம் வந்து கொண்டு இந்தப் போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் ஊடாக முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களுக்குள் தானும் மூக்கை நுளைக்க வேண்டுமென நினைப்பதை குறித்த அமைப்பாளர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இனிவரும் காலங்களிலும் இவ்வாறு முனைய வேண்டாம் என்பதையும் நான் குறித்த அமைப்பாளருக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன். போரதீவுப் பற்று பிரதேச சபையின் ஊடாக பல வேலை திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இனிவரும் காலங்களில் எமது பிரதேச சபைக்குரிய வருமானத்தை அதிகரிக்க கூடிய பல வழிகளை நாம் நான் தவிசாளர் என்ற வீதியில் தேடிக் கொண்டிருக்கின்றேன். 

அந்த வகையில் எமது சபையின்னுடைய வருமானத்தை உயர்த்தும் பொருட்டு அதனூடாக கிடைக்கும் நிதியைக் கொண்டு இப்பிரதேசத்தில் பல வேலை திட்டங்களை எமது சபையின் ஊடாகவும் செய்யலாம். 

எனவே ஆளும் கட்சியில் இருக்கின்ற அமைப்பாளர்கள் முடியுமானால் உங்களுடைய கட்சியினுடைய அமைச்சர்களை சந்தித்து அமைச்சர் மூலமாக எமது பிரதேச சபைக்கு நிதிகளை கொண்டு வந்து நீங்கள் என்னோடு நின்று வேலைத்திட்டங்களை மேற்கொள்ளலாம் என்பதையும் நான் கூறிக் கொள்கின்றேன் என அவர் இதன்போது தெரிவித்தார்.













 


SHARE

Author: verified_user

0 Comments: