1 Sept 2025

முச்சக்கர வண்டி சாரதிகளின் பிரச்சனைக்குத் தீர்வைப் பெற்றுத்தருமர்று கோரிக்கை தீர்வின்றேல் பிரதேச சபையின முன்னால் அமரவுள்ளதாக சாரதிகள் எச்சரிக்கை

SHARE

முச்சக்கர வண்டி சாரதிகளின் பிரச்சனைக்குத் தீர்வைப் பெற்றுத்தருமர்று கோரிக்கை தீர்வின்றேல் பிரதேச சபையின முன்னால் அமரவுள்ளதாக சாரதிகள் எச்சரிக்கை

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் முச்சக்கர வண்டிகள் நிறுத்தும் நிலையங்களிலும், அதனை அண்மித்த ஏனை இடங்களிலும், வெளி பிரதேசங்களைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரத்திகள் பிரயாணிகளை ஏற்றிக் கொண்டு செல்கின்றார்கள். எமது முச்சக்கர வண்டிகள் நிறுத்தும் நிலையங்களுக்கே அவர்கள் இவ்வாறு வந்து பிரயாணிகளை ஏற்றிச் செல்வதனால் எமக்கும் அவர்களுக்குமிடையில் பாரிய முரண்பாடுகள் ஏற்படுகின்றன. 

இந்நிலையில் இவ்விடையத்தை களுவாஞ்சிகுடி பொலிசார் மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை ஆகியோருக்கு தெரியப்படுத்தியும் அவர்கள் இதற்கு இதுவரையில் எதுவித தீர்க்கமான தீர்வினையும் பெற்றுத்தர வில்லை என களுவாஞ்சிகுடி முச்சக்கர வண்டி சாரதிகளின் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். 

இவ்விடையம் குறித்து இன்று திங்கட்கிழமை(01.09.2025) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள முச்சக்கர வண்டி தரிப்பு நிலையத்தில் அச்சங்கத்தினர் ஒன்றுகூடினர். இந்நிலையில் அவர்கள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தனர். இதன்போது சங்கத்தின் தலைவர் கமலநாதன், மற்றும் செயலாளர் குவிந்தன் ஆகியோர் கருத்துத் தெரிவித்தார். 

இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில் 

நாம் வெளிபிரதேசங்களிலிருந்து வரும் முச்சக்கரவண்டிகளை களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்கு வரவேண்டாம் என நாம் கூறவில்லை. ஆனால் எமது பிரச்சனையை சரியான முறையிலும், நீதியான முறையிலும் அணுகி எவருக்கும் பங்கம் ஏற்படாதவாறு தீர்த்து வைப்பதற்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உடன் முன்வர வேண்டும். எமது வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் எமது இப்பிரச்சனைக்கு தீர்வை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை பெற்றுத்தரவிலலையாயின் எதிர்வரும் 10 ஆம் திகதி களுதாவளையில் அமைந்துள்ள மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் முன்னால் எமது முச்சக்கர வண்டி சாரதிகள் அனைவரும் அமர்ந்து எமது எத்திர்ப்பை வெளிக்காட்ட வேண்டிய நிலமை ஏற்படும். 

எனவே மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் தலையீடு செய்து எமது பிரச்சனையை உடன் தீர்த்து தருமாறு வேண்டுகின்றோம். வேறு பிரதேச முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் எமது முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் இடையே கருத்து மோதல்கள் எற்பட்டு எதிர்காலத்தில ;அது பாரிய பிரச்சனையாக உருவெடுக்கும் பட்சத்தில் அதற்குப் பொறுப்புச் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். 

எனவே களுவாஞ்சிகுடி முச்சக்கர வண்டி சாரதிகளின் பொறுப்புள்ள சங்கம் என்ற ரீதியில் இதற்கு உரிய அதிகாரிகளை நாடி தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு எம்மிடத்தில் உள்ளது. எனவே மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் எதிர் வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் இதற்குத் தீர்வைப் பெற்றுத் தரவேண்டும் இல்லையேல் எதிர்வரும் 10 ஆம் திகதி நாம் பிரதேச சபையின் முன்னால் அனைத்து முச்சக்கர வண்டி சாரதிகளும் அமர்வோம் என அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.







SHARE

Author: verified_user

0 Comments: