14 Aug 2025

இலங்கையில் ஜனநாயகம் மற்றும் பன்மைத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்காக சிறுபான்மைக் குழுக்களை வலுப்படுத்தல்

SHARE

இலங்கையில் ஜனநாயகம் மற்றும் பன்மைத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்காக சிறுபான்மைக் குழுக்களை வலுப்படுத்தல்” எனும் கருப்பொருளில் கிழக்கு மாகாணத்தில் செயற்படும் அரசியல் கட்சிகளுடன் நலிவுற்ற சிறுபான்மை குழுக்களுடைய அரசியல் பங்குபற்றுதலுக்கான சவால்கள் மற்றும் அவர்களது அரசியல் பங்குபற்றுதலுக்கான அரசியல் கட்சிகளின் பங்களிப்புகள் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள தனியார் சுற்றுலா  விடுதியில் வியாழக்கிழமை (14.08.2025) நடைபெற்றது.


கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் அமைப்பின் நிறைவேற்றுப் பணிபாளர் எம்.பி.எம்.புஹாரி நடைபெற்ற இக்கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன், வைத்தியர் இளையதம்பி சிறிநாத், கிழக்கு மாகாணத்தில் அரசியலில் ஈடுபடும் கட்சிகளின் பிரதிநதிகள், சிறுபான்மை சமூகத்தின் நலிவுற்ற நிலையிலுள்ள குழுக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சிறுபான்மை சமூகங்களுக்குள் நலிவுற்ற நிலையில் வாழ்கின்ற குழுக்களை பிரதிநிதித்துவபடுத்துகின்ற பெண்கள் மற்றும் இளைஞர்களை வலுப்படுத்துவதனுாடாக உள்ளக ஆட்சியில் அவர்களின் வினைத்திறன் மிக்க பங்குபற்றலை உறுதிப்படுத்தி அவர்களுடைய பிரச்சினைகளையும் தேவைகளையும் தாமே அடையாளப்படுத்தி குரலெழுப்புவதனூடாக அவர்களுடைய பிரச்சினைகளையும் தேவைகளையும் தாமே அடையாளப்படுத்தி குரலெழுப்புவதனூடாக அவர்களுக்கு நீடித்திருக்க கூடிய தீர்வுகளை பெற்றுக்கொள்வதனை இலக்காகக்கொண்டு இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.

இக்கலந்துரையாடலில் நலிவுற்ற சமூகக்குழுக்களின் அரசியல் உரிமைகள் ஊக்குவிக்கப்பட்டு, பாதுகாக்கப்படல் வேண்டும். ஆட்சியில் அவர்களது சமமான பங்கேற்பு உறுதிப்படுத்தப்படல் வேண்டும். அரசியல் உள்ளடக்கம், நியாயமான பிரதிநிதித்துவம் ஆகியவை விருப்பத்தெரிவுகளாக இல்லாமல் அவை ஜனநாயகத்தை உண்மையான அர்த்தத்தில் உணர்வதற்கு அடிப்படையானதாக அமைந்திருத்தல் வேண்டும் என்பதை வலியுத்தி பரிந்துரைகளும் முனவைகப்பட்டன.






SHARE

Author: verified_user

0 Comments: