13 Aug 2025

கொறன பழப்பயிர் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் பிரதிநிதிகள் களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்கு விஜயம்.

SHARE

கொறன பழப்பயிர் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் பிரதிநிதிகள் களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்கு விஜயம்.

கொறன பழப்பயிர் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் பிரதிநிதிகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடிப் பிரதேசத்திற்கு புதன்கிழமை(13.08.2025) விஜயம் செய்து மாதுளைப் பயிற் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் மாதுளைத் தோட்டங்களைப் பார்வையிட்டுள்ளனர். 

இதன்போது அரசாங்கத்தின் வறுமை ஒளிப்பு செய


ற்பாட்டின் விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்டுள்ள மாதுளைப் பயிற் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் மாதுளைத் தோட்டங்களைப் பார்வையிட்டுள்ளனர்.
 

மாதுளைப் பயிற் செய்கையின்போது விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள், பூச்சித் தாக்கங்கள், பங்கஸ் தாக்கங்கள், அவற்றைக் கட்டுப்படுத்தும் விதம், பூச்சி தாக்கங்களுக்கு  அவற்றுக்கு விசிறவேண்டிய கிருமிநாசினிகள், ஊடுபயிர் செய்கைகள், உள்ளிட்ட பல விடைங்கள் தொடர்பில் அக்குழு விவசாயிகளின் தோட்டங்களுக்கு நேரடி விஜயம் செய்து பார்வையிட்டு விளக்கங்களையும், தொழிவூட்டல்களையும் வழங்கியிருந்தனர். 

இதன்போது களுவாஞ்சிகுடிப் பகுதி விவசாயப் போதனாசிரியர் எம்.றிப்கி, விவசாய விஞ்ஞானி அருநந்தி, களுவாஞ்சிகுடி அக்றி விலேஜ் கம்பனியின் தலைவர் எஸ்.மதிசிவம் மற்றும் மாதுளைச் செய்யைகாளர்கள் என பலரும் இணைந்திருந்தனர்.





































SHARE

Author: verified_user

0 Comments: