போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் இரண்டாவது
சபை அமர்வு.
தமிழ் பேசும் உதவி பொலிஸ் அதிகாரி ஒருவர்
வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்தார். அவர் அரசியல் பழிவாங்கலின் மூலம்
வேறு இடத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என போரதீவுப்பற்றுப்
பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன்
தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச சபை இரண்டாவது சபை அமர்வு செவ்வாய்கிழமை(22.07.2025) தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இச்சபை அமர்வில் ஆளும்கட்சி, எதிர்கட்சி உறுப்பினர்கள் அடங்கலாக சபையில் அங்கத்துவம் வகிக்கும் அரசில் கட்சிகளைச் செர்ந்த 16 உறுப்பினர்களும் இதன்போது பிரசன்னமாகி இருந்தனர்.
இதன்போது கீழ்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாலையடிவட்டையில் முன்னர் பொதுச்சந்தை அமைந்திருந்த இடத்தில் தற்போது இலங்கை இராணுவத்தினர் முகாம் அமைத்துள்ளனர். அந்த இராணுவ முகாம் அகற்றப்படுவதற்கு சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் அகழப்பட்டு வரும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும்.
பிரதேச சபையில் சுகாதார ஊழியர்களாக கடமையாற்றுகிறவர்களை அத்தொழிலைச் செய்வதற்குஉரிய செயற்பாடுகளை முன்னெடுத்தல்.
வீதிகளுக்கு மின்விளக்கு பொருத்துதல், எல்லைப் பகுதிக்கு அரசாங்கம் யானை பாதுகாப்பு வேலைகளை அமைக்க வேண்டும். சனசமூக நிலையங்களை வலுவூட்டுதல், பிரதேச சபையில் பழுதடைந்திருக்கின்ற வாகனங்களைத் திருத்தியமைத்தல். பிரதேச சபையின் வருமானத்தை அதிகரித்தல், நூலகங்களை அபிவிருத்தி செய்தல், போன்ற பல தீர்மானங்கள் இதன்போது எடுக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment