மண்முனை தென் எருவில் பற்று இளைஞர் கழக
பிரதேச சம்மேளன மாநாடும் புதிய நிர்வாக தெரிவும்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இளைஞர்களுக்கான பிரதேச சம்மேளனம் மாநாடு மற்றும் புதிய நிர்வாக தெரிவு ஞாயிற்றுக்;கிழமை (20.07.2025) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் தலைவராக இன்பலோஜனும், அமைப்பாளராக அஜித்தனும், உப தலைவராக அனுதர்சினியும், உபசெயலாளராக லேணுஜாவும், உப அமைப்பாளராக பவித்ரனும், தெரிவு செய்யப்பட்டடனர்.
பிரதேச இளைஞர் சேவை அதிகாரி சபியாஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் கலந்து கொண்டதுடன், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி சதீஸ்வரி கிருபாகரன், பிரதேச இளைஞர்கள் யுவதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது புதிய நிர்வாக தெரிவைத் தொடர்ந்து இளைஞர்களுக்கான விசேட மாநாடு நடைபெற்றது. இதில் இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், இளைஞர்களுக்கு சமூகத்தில் நிலவும் குறைபாடுகள், இளைஞர், யுவதிகளுக்கு விசேட அறிவுரைகள், கல்வி, கலை, கலாசாரம், விளையாட்டு மற்றும் பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.
0 Comments:
Post a Comment