20 Jul 2025

பல ஊழல் குற்றங்களுக்கான, வன்முறைகளுக்கான, கைதுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன – சிறிநாத் எம்.பி

SHARE

பல ஊழல் குற்றங்களுக்கான, வன்முறைகளுக்கான, கைதுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன – சிறிநாத் எம்.பி

தற்காலங்களில் அரச நடைமுறைகளில் பாரிய விடயங்கள் முன்னெடுக்கப் படுகின்றன பல ஊழல் குற்றங்களுக்கான கைதுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அதே வன்முறைகளுக்கான கைதுகளும் இடம்பெற்று கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு விடயங்களையும் நாம் நோக்க வேண்டும். 

என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை(19.07.2025) மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில். 

ஊழலுக்கு எதிராக வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன் பொருளாதார விடையங்களில் மிகவும் அழுத்தமான மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய வழி வகைகளை செய்வதாக அரசு வாக்குறுதி அளித்திருந்தது. அந்த வகையில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் அரசியல் பழிவாங்கல்களுக்கு அப்பாறபட்ட வகையிலேயே மிகச் சரியாக நடத்தப்பட வேண்டும். என்றும் வன்முறையற்ற ஒரு சூழலை ஏற்படுத்தவதற்கு அரசாங்கம் மிகவும் ஒரு உறுதிப்பாடான நிலையிலே செயல்பட வேண்டும். 

இந்த ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மிகவும் இறுக்கமாக செய்யப்படுகின்ற அதேவேளையில் பல இடங்களில் பல வன்முறைச் சம்பவங்கள் பதிவு செய்யப்படுகின்ற நிகழ்வானது அரசாங்கம் இன்னும் அந்த விடயங்களிலே தமது கட்டுப்பாட்டை முழுமையாக கொண்டிருக்க வில்லையோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. 

அதற்கு அப்பால் மக்களின் பொருளாதார விடையங்களைப் பொறுத்த வகையிலே எரிபொருள், பால்மா, போன்ற பல பொருட்களுக்கான விலையேற்றங்கள் இன்னும் கட்டுப்பாட்டில் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்ற நிலைமையை காணக்கூடியதாக இருக்கின்றது.

பல உத்தரவாதங்களை வழங்கி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இந்த விடயங்களிலே மக்களின் தேவைகளையும், மக்களின் பொறுப்புகளை மிகவும் பொறுப்புடன் கையாள வேண்டும். 

கடந்த அரசாங்கங்களைப் போன்று அதற்கு வேறு காரணங்களை கூறி அது எங்கள் கைகளில் இல்லை என்று கூறுவதானது தேர்தல் காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதி வாக்குறுதிகளை மீறுவதாகவும் கடந்த கால அரசுகளைப் போன்று செயற்படுவதாக அமையும். 

பொருளாதார நெருக்கடி மிகுந்த சூழ்நிலையில் மக்கள் பல துன்பங்களை சந்தித்து தனது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்ற வேளையிலே மக்களுக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய வகையில் இந்த பொருளாதார இடர்பாடுகளைத் தீர்த்து மக்களுக்கு ஒரு சுமுகமானதொரு நிலையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்க வேண்டும். 

தமிழ் மக்கள் மத்தியில் கடந்த காலங்களிலே மிக பாரிய அளவிலேயே அந்த பேரவலமான போர் சூழ்நிலையின்போது பல படுகொலைகள் இடம்பெற்று இருக்கின்றன. அந்த படுகொலைகள் பல மூடி மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பல விசாரணைகள் இன்றி அப்பாவி பொதுமக்கள் மக்களுக்கு எந்த விதமான நீதித் பொறிமுறைகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை. அந்த அடிப்படையில் தற்போது செம்மணிப் புதைகுழி விடயம் பரவலாக பேச கொண்டிருக்கின்ற இவ்வேளையில் அப்பகுதியில் பல மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றன. இன்னும் பல்வேறு எண்ணிக்கையான மனித எலும்புக்கூடுகள் இருப்பதாக கடந்த காலங்களிலே பல விடயங்களிலேயே சம்பந்தப்பட்ட இராணுவ வீரர்கள் அதற்குரிய சாட்சியங்களாகக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் சர்வதேச ரீதியாக, ஒரு நீதி பேணப்பட வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. அந்த வகையிலே மேலும் இந்த செம்மணி விவகாரம் மீண்டும் மிகவும் நேர்மையாக ஆராயப்பட வேண்டும். அங்கு புதைக்கப்பட்டவர்களின் எலும்புக்கூடுகள் வெளிக்கொணரப்பட்டுக் கொண்டிருப்பது தமிழ் மக்களுக்கு கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்டு அநீதிகளுக்கான நீதி நெறிமுறைகள் கிடைக்க வேண்டும். ஒரு சர்வதேச நீதி பொறிமுறை ஏற்படுத்தப்பட்டு தமிழ் மக்களுக்கு இந்த விடயத்திலே அவர்கள் எதிர்கொண்ட இழப்புகளுக்கான முடிவுகள் கிடைக்கப்பெற வேண்டும்.

செம்மணி விவகாரத்த்தைப் போன்று வடகிழக் கெங்கும் தமிழ் மக்கள் மத்தியில் பல படுகொலைகள் இடம்பெற்று அவை மூடி மறைக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கிய ஒட்டுக் குழுக்களும் பல்வேறு வகையான அழிவுகளை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கின்றார்கள். அதிகளவு உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றனர். இதுவரையில் அவர்களுக்கான தீர்வுகள் இதுவரை எட்டப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவருக்கான நீதிப் பொறிமுறைகூட ஒழுங்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கவில்லை. 

தற்போதைய அரசாங்கத்திலும்கூட அதற்கான ஒரு விடை கிடைக்க பெறவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நீதிப் ஒருமுறை கிடைக்கப்பெறவில்லை. அத்தோடு மனிதப் புதைகுழிகளுக்கான சர்வதேச நீதிப் பொறிமுறை வேண்டும். என்றும் நாம் பல்வேறு வழிவகைகளிலே எமது அழுத்தங்களையும் குரல் கொடுத்து வருகின்றோம். இந்த விடயத்திலே அரசு

செவிசாய்த்து மனித உரிமைகளுக்காக நீதி நேர்மைகளுக்காக குரல் கொடுக்கின்றோம் என்று கூறிக் கொள்கின்ற அரசாங்கம் அதன் செயற்பாடுகளும் மிகவும் நேர்மையாக அமையவேண்டும். என்றும் நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

அதுபோல் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அமைந்திருக்கின்ற மயிலத்தமடு மாதவனை பிரச்சனை 600 நாட்களுக்கு மேலாக கடந்து கொண்டிருக்கின்றன. அந்த பிரச்சனைகளுக்கு இன்னும் தீர்வு உறுதியாக எட்டப்படவில்லை. 

மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அமைந்திருக்கின்ற மாந்தீவு என்ற இடம் சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டியதாகும். அந்த இடத்தை சிறைச்சாலையாக  மாற்றுவதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கொண்டிருக்கின்றன. இது சம்பந்தமான எமது அழுத்தமான பல எதிர்ப்புகளை அரசுக்கும் அமைச்சரவைக்கும் பாராளுமன்றத்திலும் மாவட்ட அபிவிருத்திக்குழுவிலும் நாம் தெரிவித்திருக்கின்றோம்.

நாட்டுக்கு தேவையான ஒரு சிறைக்கூடத்தை மட்டக்களப்பில் அமைக்க வேண்டிய ஒரு தேவைப்பாடு இல்லை. சுற்றுலாத்தலமாக மாற்றி அதனை பொருளாதாரத்திற்கு வருமானமீட்டுகின்ற மாந்தீவு பகுதியை எவ்வாறு சிறைக்கூடமாக மாற்றுவதற்பு எடுக்கும் முயற்சி தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கிலேசத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகின்றது.

அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின்னால் சில பிரதேச செயலாளர் பிரிவுகளைப் பிரிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அறிவித்தல் பல அழுத்தங்கள் மத்தியில் பின்வாங்கப்பட்டிருக்கின்றது.

பொதுமக்களின் பாதுகாப்பு என்ற விடயத்தில் ஒரு சுமுகமான நிலைமை எமது நாட்டிலேயே இன்னும் இல்லாமல் உள்ளது. பல விடயங்களை இதன் ஊடாக நாம் அவதானிக்க முடிகின்றது. நாளாந்தம் பல துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 

வடகிழக்கு அப்பால் பல சம்பவங்கள் இடம்பெற்றாலும், வடகிழக்கிலே  வேறு வடிவங்களில் சம்பவங்கள் இடம்பெற்று கொண்டிருக்கின்றன. குறிப்பாக சட்டரீதியற்ற முறையில் மண்ணகழ்வு, சாராய உற்பத்தி சட்ட திட்டத்திற்கு எதிரான முறையில் பல போதைப் பொருள் விற்பனைகள், பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக செய்திகள் குறிப்பிடப்படுகின்றன. எனவே பாதுகாப்பு என்ற விடயத்திலே சில சட்டத்தை அமுல்படுத்துகின்றது என்ற விடயத்தை அரசாங்கம் இன்னும் வெற்றி காணவில்லையோ என்ற ஒரு தெளிவான நிலைப்பாடுகின்றது. 

குறிப்பாக மண்ணகழ்வு விடைத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு கொள்கையை முன்னெடுத்து அதனை சட்டரீதியாக வழங்குவதற்கு ஒரு உகந்த சூழ்நிலை இன்னும் இந்த மாவட்டத்தில் இல்லை. சட்ட ரீதியற்ற முறையிலே பல பகுதிகளிலே இந்த மண்ணனழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த மண்ணகழ்வு நடவடிக்கைகளை பல இடங்களிலே நிறுத்த வேண்டிய தேவை ஏற்படுகின்ற பொழுது மண் விலையை அதிகரித்து பாவனையாளர்கள் பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்துகின்ற நிலைமை உள்ளது. சட்டத்தை அமுல் படுத்துகின்ற விடயத்திலே அரசாங்கம் சரியாக கையாள முடியாமல் தோல்வி கண்டுள்ளதா என்பதை நாம் பார்க்க வேண்டும்.

பல இடங்களிலே போதைப் பொருருக்கு எதிராகவும், போதைப்பொருளுடன், கைது செய்பவர்கள் தொடர்பிலும் பல்வேறு வெடிச்ச சம்பவங்கள் சம்பந்தமாகவும் நாளாந்தம் அவதானிக்க முடிகின்றது. இது இன்னும் முழுமையாக நாட்டிலே சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டு முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கவில்லை என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. மிகவும் பொதுவான இறுக்கமான நடைமுறைகள் கொண்டு செல்லப்பட்டு சட்டம் ஒழுங்கு நிலை நாட்டுவது மிக நேர்த்தியான கடப்பாடுகள் எடுக்கப்பட வேண்டும். அதற்கு புதிய ஏற்பாடுகளை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சும், அரசாங்கமும் செய்ய வேண்டும். அதனை மிகவும் விரைவாக செய்ய வேண்டும். அதற்குரிய பொறுப்புள்ளவர்களாக அரசாங்கம் நடந்து கொள்ள வேண்டும். என அவர் இதன்போது தெரிவித்தார்.







 

SHARE

Author: verified_user

0 Comments: