8 May 2025

மண்முனை தென் எருவில் பற்றில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் ஐந்து வட்டாரங்களில் படுதோல்வி.

SHARE

மண்முனை தென் எருவில் பற்றில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் ஐந்து வட்டாரங்களில் படுதோல்வி.

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் 11 வட்டாரங்கள் அமைந்துள்ளன. அதில் களுவாஞ்சிகுடி வட்டாரத்திற்கு மாத்திரம் இரண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு 11 வட்டாரங்களிலும் 12 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். 

இந்நிலையில் களுதாவளை வடக்கு, களுதாவளை தெற்கு, பெரியகல்லாறு, மற்றும் மகிழூர் ஆகிய வட்டாரங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி படுதேல்வியை அடைந்துள்ளது. ஏனைய வட்டாரங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனினும்  மேற்படி வட்டாரங்கள் தொடற்சியாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோட்டையாக இருந்து வந்துள்ளன. 

இது இவ்வாறு இருக்க பெரியகல்லாற்றைப் பிறப்பிடமாக்க கொண்டவர்தான் காலம் சென்ற தமிழர் விடுதலைக் கூட்டணியில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கணேசலிங்கம் அதுபோல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான காலம் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா பெரியகல்லாற்றில் பிறந்து  கோட்டைக் கல்லாற்றில் திருமணம் செய்து வசித்து வந்தவர். கோட்டைக்கல்லாற்றைச் சேர்ந்த திருமதி..றஞ்சினி என்பவர்தான் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் இறுதியாக உப தவிசாளராக பதவி வகித்து வந்தவர். அதுபோல் கோட்டைக்கல்லாற்றிச் சேர்ந்த மா.நடராசா என்பவர் அக்கட்சியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு செயற்பட்டு வந்தவர்.

முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியில் சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் இம்முறை பெரியகல்லாறு வட்டாரத்தில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு அந்த வட்டாரத்தை மீண்டும் வென்றுள்ளனார்.

இந்நிலையில் களுதாவளைக் கிராமத்திலிருந்தே அக்கட்சியைச் சேர்ந்த .கனகசபை என்பவர் பாராளுமன்ற உறுப்பினரான இருந்தவர். பிரதேச சபையின் இறுதி ஆட்சிக்காலத்தில் களுதாவளையைச் சேர்ந்த காலம் சென்ற யோகநாதன் என்பவர்தான் தவிசாளராக பதவி வகித்து வந்தார். 

களுதாவளை வடக்கு வட்டாரத்தில் தேசிய மக்கள் சக்தியும், களுதாவளை தெற்கு வட்டாரத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது.

அதுபோல் மகிழூர் வட்டாரமும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அதிக விருப்புக்குரிய வட்டாரமாக திகழ்ந்து வந்திருந்தது. இந்நிலையில்தான் இவ்வாறு தமிழ் தேசிய பின்புலத்திலுள்ள பாரம்பரிய கிராமங்களும் தமிழ் தேசியத்திலே ஊறிப்போயிருந்த கிராமங்களும் இம்முறை நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கையிலிருந்து நளுவிப் போயுள்ளது. 

மகிழூர் வட்டாரத்தையும் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. 

சரியான வேட்பாளர் தெரிவின்மையும், அக்கட்சியில் ஒரு சிலரின் ஆதிக்கத்தன்மையும், இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இடைநடுவில் புகுந்தவர்களின் செயற்பாடுகளே இதற்கு காரணம் எனவும், கட்சி அடிப்படையிலிருந்து மறுசீரமைக்கப்பட வேண்டும் அப்போதுதான் கைநழுவிப்போயுள்ள பாரம்பரியமாக தமிழ் தேசியத்தை நேசிக்கின்ற கிராமமக்களை மீண்டும் உள்ளீர்ப்புச் செய்யமுடியும் என தமிழரசுக் கட்சியை நேசிக்கின்ற பலர் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இப்பிரதேசத்திற்கு மேலதிகமாகக் கிடைத்திருக்கின்ற ஒரு ஆசனத்தை இளைஞர் ஒருவருக்கு வழங்க வேண்டும் எனவும் இளைஞர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.



SHARE

Author: verified_user

0 Comments: