தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை கட்டம் கட்டமாக நிறைவேற்றி வருகின்றது. – பிரபு எம்.பி.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை கட்டம் கட்டமாக நிறைவேற்றி வருகின்றோம் மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
கடந்த 39 வருடங்களாக மூடப்பட்டிருந்த சேற்றுக்குடா புதூர் வீதி இப்பகுதி மக்கள் விடுத்த வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதி உத்தரவு அமைய தற்போது வீதியினை திறந்து வைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நெடுஞ்சாலைகள் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க வீதி திறப்பதற்கான முன்னாயத்த களப்பணிகளை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று புதன்கிழமை(23.04.2025) பார்வையிட்டதன் பின் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
கடந்த கால ஆட்சியாளர்கள் இந்த வீதி மூடப்பட்டிருந்தது சம்பந்தமாக எதுவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை இருப்பினும் நாம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக தற்போது இந்த வீதி மக்களின் பாவனைக்காக திறக்கப்படும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனால் அரச ஊழியர்கள் பெரிதும் நன்மை அடைய உள்ளனர். எமது அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியதற்காக இப்பகுதி மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விமானப்படையினர் மற்றும் மாநகர சபை ஊழியர்களால் தற்போது இந்த வீதியை திறப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment