5 Mar 2025

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு பல செயற்றிட்டங்கள் முன்னெடுப்பு.

SHARE

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு பல செயற்றிட்டங்கள் முன்னெடுப்பு.

ஜனாதிபதியின் பணிபுரையின் பெயரில் பெண்கள்  தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் வகையில் பல செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன் தெரிவித்துள்ளார். 

மாவட்ட சம்மேளன பிரதிநிதிகளுக்கான தேசிய மகளிர் தின அங்குரார்பண வார நிகழ்வு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் எஸ்.பிரணவன் தலைமையில் புதன்கிழமை(05.02.2025) மட்டக்களப்பில் இடம்பெற்றது. இதன்போர் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட செயலகத்தினால் இம்முறை ஜனாதிபதியின் பணிபுரையின் பெயரில் இம்முறை சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் மிக வினைத்திறனுடைய வகையில் முன்னெடுக்கப்பட உள்ளன. 

இதன் ஆரம்ப நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மாவட்ட மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் கலந்து கொண்டு மாவட்ட செயலகத்தினால் எதிர்காலத்தில் பெண்களுக்காக முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் சம்பந்தமாக எடுத்துரைத்தார். 

நிகழ்வுக்கு மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அபிவிருத்தி திட்ட உயர் அதிகாரிகள் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் பயனாளிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 

ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற மாவட்ட செயலாளர்களுடனான  கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் மீளாய்வு கூட்டத்தின் போது புதிய அரசாங்கத்தினால் இம்முறை சர்வதேச மகளிர் தினம் கிழக்கு மாகாணத்தில் பெண்கள்  தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் வகையில் பல செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.










 

SHARE

Author: verified_user

0 Comments: