26 Mar 2025

மட்டக்களப்பு கொழும்பு இடையிலான புகையிரத சேவை அட்டவணைகளில் மீண்டும் நேர மாற்றம்.

SHARE

மட்டக்களப்பு கொழும்பு இடையிலான புகையிரத சேவை அட்டவணைகளில் மீண்டும் நேர மாற்றம்.

கிழக்கு மாகாண பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் மட்டக்களப்பு கொழும்பு இடையிலான புகையிரத சேவை அட்டவணைகளில் நேர மாற்றம். 

கிழக்கு மார்க்கத்திற்கான ரயில் சேவைகளில்  தொடர்ச்சியாக காட்டு யானைகள் விபத்துக்குள்ளாகி வருவதனை தடுக்கும் நோக்கில் கடந்த 7 திகதி முதல் நேர மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்தது காட்டு யானைகள் பாதுகாக்கப்படுகின்ற அதே வேளை  கூடுதலான  நேரம் இந்தப் பயணத்தின் போது காணப்படுகின்ற விடயங்களையும் பொதுமக்களின் சிரமங்களையும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரன் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து கிழக்கு மாகாண பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும்

மட்டக்களப்பு கொழும்பு இடையிலான புகையிரத சேவை அட்டவணைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இது திங்கட்கிழமை(24.03.2025) முதல் புதிய நேர அட்டவணையின் படி புகையிரத பயணங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

ஆ;நதவகையில் அதிகாலை 01.30 இற்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும் புலதிசி காலை 09.01மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும். கொழும்பிலிருந்து மாலை 03.15 இற்கு புறப்படும் புலதிசி இரவு 10.38 மணிக்கு  மட்டக்களப்பை வந்தடையும்.

இரவு 07.40 இற்கு மட்டக்களப்பிலிருந்து  புறப்படும் மீனகயா அதிகாலை 04.16 மணிக்கு கொழும்பு சென்றடையும். 

இரவு 11.00 இற்கு கொழும்பிலிருந்து புறப்படும் மீனகயா காலை 06.45 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும். காலை 06.10 இற்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும் உதயதேவி மாலை 03.00 மணிக்கு கொழும்பு சென்றடையும். காலை 06.05 இற்கு கொழும்பிலிருந்து புறப்படும் உதயதேவி மாலை 03.00 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும். 

புலதிசி,மீனகயா புகையிரதங்களில்

First class AC(AFC), Third class reserved (TCR)

மாத்திரமே  booking  செய்து கொள்ள முடியும்.

உதயதேவி புகையிரதத்தில் 2nd  class  மாத்திரமே booking செய்து கொள்ள முடியும்.  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




 

SHARE

Author: verified_user

0 Comments: