உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் படுவான்கரை பகுதியில் நீண்ட நாட்களாக
சேதமடைந்த பிரதான வீதிகளை கார்பட் இடும் பணிகள் முன்னெடுப்பு.
அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் நீண்ட நாட்களாக சேதமடைந்த வீதிகளை கட்டம் கட்டமாக கார்பட் இட்டு வீதிகளைக் புனரமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த கொக்கட்டிசோலை அம்பிளாந்துறை பிரதான வீதி தற்போது புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. இதன் ஒரு கட்டமாக மகிழடித்தீவிலிருந்து பட்டிப்பளை வரையிலான வீதிகளை கார்பட் இடும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் 8 கிலோமீட்டர் வீதி 60 பில்லியன் ரூபாய் செலவில் தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றன. வீதிகளை அகலப்படுத்தி வடிகான்கள் அமைத்து அதன்பின் புதிய வீதிக்கான கார்பட் இடப்படுகின்றன.
கடந்த காலங்களில் இவ்வீதி சேதமடைந்து காணப்பட்டதனால் மாவட்டத்தில் தொடர்ச்சியான மழைக்காலங்களில் இவ்வீதியை பயன்படுத்துவோர் பெரும் அசோகாரியங்கக்கு முகம் கொடுத்து வந்தனர்.
தற்போது இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பொதுமக்கள் மாணவர்கள்
அரசு ஊழியர்கள் என பெருமளவிலான பொதுமக்கள் இதனால் நன்மை அடைய உள்ளதுடன் பிரயாண நேரமும்
குறைவடையும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment