8 Mar 2025

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்திய சர்வதேச மகளிர்தின நிகழ்வு.

SHARE

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்திய சர்வதேச மகளிர்தின நிகழ்வு.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்திய சர்வதேச மகளிர்தின நிகழ்வு சனிக்கிழமை(08.03.2025) மட்டக்களப்பு மாவட்டம ;களுவாஞ்சிகுடியில் அமைந்தள் சீ.மூ.இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது. 

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மொழியியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் றூபிவனரினா பிரான்சிஸ் சிறப்பு விருந்திரனராக கலந்து கொண்டிருந்தார். 

இதன்போது பெண்களுக்கான உரிமைகள் மற்றுமு; சுதந்திரம் அவர்களால் ரியாகப் பயன்படுத்தப் படுகின்றது, பயன்படுத்தப்படவில்லை என இரு தலைப்புக்களில் நிருவாக சேவை அதிகாரிகளால் விவாதம் ஒன்றும் இடம்பெற்றது.

அதில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம், அம்பாறை பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி.ஜெயந்திமாலா பிரியதர்சன், அக்கரைப் பற்று உதவிப் பிரதேச செயலாளர் ஜனாப் வை.றாசிக் மற்றும் மண்முனை தென் எருவில் பற்ற பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், கல்முறை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதியசயராஜ், அட்டாளைச்சேனைப் உதவிப் பிரதேச செயலாளர் ஜனாபா நஜீஜா முஸாபீர் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர். 

இதன்போது தெரிவு செய்யப்பட்ட 5 சாதனைப் பெண்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், அனுபவப் பகிர்வுகளும் இடம்பெற்றன.














SHARE

Author: verified_user

0 Comments: