8 Mar 2025

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.

SHARE

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு லோயிட்ஸ் அவன்யு வீதியில் இருந்து சனிக்கிழமை(08.03.2025) 2:30 மணிக்கு ஆரம்பமான மகளிர் பேரணியது மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைமை காரியாலயத்தை வந்தடைந்ததும் அக்கட்சியின் மகளிர் செயலாளர் சுசிகலா அருள்தாஸ் அவர்களின் தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பிரதான பங்குபற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. 

தொடர்ந்து அக்கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் நந்தகோபன் முன்னாள் மகளிர்அணி செயலாளர் செல்வி மனோகர் அகியோரின் திருவுருவ சிலைக்கு முன்னாள் கிழக்கு மாகாண முதமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மகளிர் அணி செயலாளர் சுசிகலா அருள்தாஸ் உள்ளிட்டவர்களினால் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப் பட்டத்துடன் கலாச்சார நிகழ்வுகள் நடைபெற்றதை அடுத்து மகளிர் அணி கொள்கை பிரகடனம் நிறைவேற்றப்பட்டதுடன் மகளிர் தின உரைகளும் நடைபெற்றன.


























SHARE

Author: verified_user

0 Comments: