8 Mar 2025

பாடுமீனாகிய புலத்தசி சுமார் 11 மணித்தியாளர்களின் பின் மட்டக்களப்பை வந்தடைந்தது.

SHARE

பாடுமீனாகிய  புலத்தசி சுமார் 11 மணித்தியாளர்களின் பின் மட்டக்களப்பை வந்தடைந்தது.

பாடுமீனாகிய புலத்தசி சுமார் 11 மணித்தியாளர்களின் பின் மட்டக்களப்பை வந்தடைந்தது எனினும் பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர். 

காட்டு யானைகளின் உயிரிழப்பை தடுப்பதற்காக 2025.03.07 ஆம் திகதியிலிருந்து கொழும்பு மட்டக்களப்பு இடையிலான பிரதான  புகையிரத சேவைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்ட போதிலும்

வெள்ளிக்கிழமை(07.03.2025) கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு 11 மணிக்கு புறப்பட இருந்த பாடுமீன் புகையிரதம் புலத்திசியாக மாற்றப்பட்டு அரை மணித்தியாலம் ஆசன முற்பதிவுகளில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பிந்தியே மட்டக்களப்புக்கு புறப்பட்டது. 

இருப்பினும் சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு மட்டக்களப்பு வராமல் 2 மணித்தியாலங்கள் தாமதமாக வந்ததால் அதில் பிரயாணம் செய்த பயணிகள் பலத்த அசோகரியங்களை எதிர்நோக்கினர். வயதானவர்கள் நோயாளிகள் குழந்தைகள் அரச உத்தியோஸ்தர்கள் தூர இடத்து பிரயாணிகள் தாம் மிகுந்த அசௌகரியங்களை எதிர் நோக்கியதாகவும், காட்டு யானைகளை காப்பாற்றுவதற்காக மனிதர்களை வதைக்க வேண்டாம் என அவர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். 

முன்பு இருந்தது போல் தங்களுக்கு நேர மாற்றத்தை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கைகள் விடுத்தனர். இந்த சேவைப் பாதிப்பதனால் சகல இணைப்புச் சேவைகளும் சனிக்கிழமை மட்டக்களப்பில் இருந்து புறப்பட இருந்த சகல புகையிரத சேவைகளும் இரண்டு மணித்தியாலம் தாமதமாகியே தங்களது சேவைகளை தொடர்ந்தன.  எனவே சம்பந்தப்பட்டவர்கள் இதனை கருத்தில் கொண்டு புகையிரத பொதுப் போக்குவரத்து சேவைகளை தமக்கு வழமை போல் ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை பிரயாணிகள் விடுக்கின்றனர்.






SHARE

Author: verified_user

0 Comments: