4 Mar 2025

களுதாவளையில் நடைபெற்ற தொழில் சந்தை

SHARE

களுதாவளையில் நடைபெற்ற தொழில் சந்தை
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும் இணைந்து நடாத்திய இவ்வருடத்திற்கான தொழில் சந்தை நிகழ்வு செவ்வாய்கிழமை (04.03.2025) களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. 

மனிதவ அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் க.ரவீந்திரனின் ஒழுங்கமைப்பில்  மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கணக்காளர் வ.நாகேஸ்வரன் நிருவாக உத்தியோகஸ்த்தர் தவேந்தரன் உள்ளிட்ட பலர் பங்கு கலந்துகொண்டிருந்தனர் 

இந்நிழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட தொழில் வழங்குனர்கள், 250 இற்கு மேற்பட்ட தொழில் தேடுனர்கள் என பலர் கலந்து கொண்டதுடன், இதில் பல இளைஞர்கள் அவ்விடத்திலேயே தமக்குத் தேவையான பயிற்சிகளுக்கும், தொழில்களுக்குமுரிய வசதிவாய்ப்புக்களைப் பெற்றுக் கொண்டனர்.






























SHARE

Author: verified_user

0 Comments: