5 Mar 2025

தேசிய மகளிர் வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற விற்பனைக் கண்காட்சி.

SHARE

தேசிய மகளிர் வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற விற்பனைக் கண்காட்சி.

2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூரும் வகையில் தேசிய மகளிர் வாரத்தை முன்னிட்டு விற்பனைக் கண்காட்சி ஒன்று மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் புதன்கிழமை(05.02.2025) நடைபெற்றது. 

“நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அவள் வலுவாக வழிகாட்டியாக இருப்பாள்  என்ற கருப்பொருளின் கீழ் இந்த ஆண்டு மார்ச் 02 முதல் 08 வரை தேசிய மகளிர் வாரம் கொண்டாடப்படுகின்றது. 

இந்நிலையில் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர் வார நிகழ்வுகள் பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகௌரி தரணிதரன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இடம்பெற்று வருகின்றன. 

அந்த வகையில் பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப்பொருட்களை மேம்படுத்தல் மற்றும் சந்தை வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஏற்பாடு செய்த விற்பனை கண்காட்சியும் விற்பனையும் இதன்போது பிரதேச செயலக முன்றலில் இடம்பெற்றது. 

இந்த நிகழ்வில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிறு தொழில் முயற்சியாளர்களினால்  உற்பத்தி செய்யப்பட்ட 30 இற்கும் அதிகமான உள்ளூர் உற்பத்தி பொருட்கள்  காட்சிப்படுத்தப்பட்டிருந்ததோடு,  கலந்து கொண்டோரினால் பெருமளவான உற்பத்திப் பொருட்கள் கொள்வனவு செய்வதில் ஆர்வம் செலுத்தியமையை  காணக்கூடியதாக இருந்தது. 

இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் உட்பட ஏனைய பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.















 

SHARE

Author: verified_user

0 Comments: