26 Mar 2025

முஸ்லிம் காங்கிரசுடன் எந்தவித ஒப்பற்தங்களும் திரைமறைவு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை – சிறிநாத் எம்.பி.

SHARE

முஸ்லிம் காங்கிரசுடன் எந்தவித ஒப்பற்தங்களும் திரைமறைவு  நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை – சிறிநாத் எம்.பி.

தமிழரசு கட்சிக்கு அளிக்கப்படும் வாக்குகள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி  ஆட்சி அமைப்பதற்கு வழங்கப்படும் என வதந்திகள் கூறப்படுகின்றன. இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவூவ் ஹக்கீம்கூட சில கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றார். இது உண்மையற்ற விடயம். நாங்கள் தனித்து நின்று போட்டியிடுவது என்றும் விரும்பினால் தமிழ் தேசியத்தை நேசிக்கின்ற கட்சிகள் இணைந்து பயணிக்கலாம் என்றும் நாங்கள் கடந்த மத்திய குழு கூட்டத்தில் முடிவெடுத்திருந்தோம். அதற்கு அப்பால் ஆட்சி அமைப்பதற்கு தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து கொள்ளலாம் எனவும் நாங்கள் முடிவெடுத்திருந்தோமே தவிர எந்தவிதமான ஒப்பந்தங்களும் எந்த விதமான திரை மறைவு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். 

என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார். மட்டக்களபபில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் திங்கட்கிழமை(24.03.2025) மாலை நடைபெற்ற ஊகடவியளலார் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில் 

நடைபெற இருக்கின்ற உள்ளுராட்சி சபை தேர்தல் தமிழ் மக்களுக்கு மிக முக்கியமான தேர்தலாக நாம் பார்க்கின்றோம். ஏனெனில் கடந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு தவிர்ந்த பல மாவட்டங்களிலும் பல்வேறு கட்சிகளுக்கும் மக்கள் வாக்களித்து தமிழ் தேசியம் சம்பந்தமான விடயங்களில் பல்வேறு பேசு பொருளாக இருக்கின்றது. முக்கியமாக இந்த விடயத்திலே தமிழ் மக்கள் மிகத் தெளிவாக சிந்தித்து தமிழரசு கட்சிக்கு தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்ற ஊழலற்ற வன்முறையற்ற கட்சியாக பயணித்துக் கொண்டிருக்கின்ற தமிழச்சி கட்சியின் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும். எனவே மக்களின் ஜனநாயக ஆயுதமான வாக்குரிமையை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

இதன் மூலம் தமிழ் தேசியத்தை உலகெங்கும் தெளிவாக எடுத்துச் செல்லக்கூடிய தேவை இருக்கின்றது. கடந்த தேர்தலிலே பல மாவட்டங்களிலும் மாற்றங்களை விரும்பி தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கிய வாக்குகள் பேசுபொருளாக இருக்கின்றது. தேசிய மக்கள் சக்தி கட்சிகூட தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தை கைவிட்டு விட்டார்கள் என்ற பிரசாரத்தையும் முன்னெடுத்திருக்கின்றார்கள். உண்மையிலேயே மக்கள் இவ்விடயத்திலே ஊழலற்ற வன்முறையற்ற ஆட்சி செய்யும் வேண்டுமென்று வாக்களித்தார்களேதவிர தமிழ் தேசியத்தின் பால் பற்று கொண்டு தமிழரசி கட்சிக்கு மிக அதிகளவான வாக்குகளை கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வழங்கியிருக்கின்றார்கள் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே தமிழரசு கட்சி பாரிய வெற்றியை பெற்றிருக்கின்றது. இதன்மூலம் தமிழரசுக் கட்சி ஒரு பாரிய வெற்றியை எட்டி இருக்கின்றது. 

புதிதாக கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்ற ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கின்றது. கடந்த காலத்தில் இருந்த அரசாங்கங்களுடன் பேரினவாத சக்திகளுடன் ஒன்றிணைந்து செயல்பட்டவர்கள் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடித்தவர்கள், தமிழ் தேசியத்தின் ஒருமைப்பாட்டை குலைப்பதற்காக பேரினவாத சக்திகளின் ஊடாக இவ்வறான கூட்டமைப்புகள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த விடயத்தில் தமிழ் மக்கள் மிகத் தெளிவாக சிந்தித்து செயற்பட வேண்டும். 

நடைபெற இருக்கின்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு மக்கள் வாக்களிப்பதன் மூலம் தமிழ் தேசியத்தை உலகுக்கு தெளிவாக வெளிப்படுத்த அதற்குரிய தேர்தலாக இது அமைகின்றது. இதில் தமிழ் மக்கள் எடுக்கும் முடிவு உறுதியானதாக அமைய வேண்டும். 

பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழ் தேசியத்தை பாதிக்கின்ற பல்வேறு வகையான நடைமுறைகள் இந்த அரசாங்கத்திலும் அரங்ககேறி கொண்டிருக்கின்றதா என்பதை நாம் சிந்நிக்க வேண்டும். ஆட்சேர்ப்பு விடையங்கள், அரச பதவி விடயங்கள், போன்ற விடயங்களிலும் வடகிழக்கு பிரதேசங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கவில்லை. வரவு செலவுத் திட்டத்தில்கூட கிழக்கு அபிவிருத்திக்கென்று ஒரு சிறப்பான நிதியொதுக்கீடு இருக்கவில்லை அது தொடர்பில் நாங்கள் கேட்டபோது இந்திய அரசாங்க அதனைப் பார்த்துக் கொள்ளும் என சொல்லப்பட்டிருக்கின்றது. 

கடந்த கடந்த யுத்தத்திலே பாதிப்புற்று பொருளாதாரத்தில் பின்னடைவை எதிர்நோக்கி இருக்கின்ற இந்த சமூகத்திற்கு இந்த அந்த வரவு செலவுத் திட்டத்தில் அந்த காயத்தை ஆற்றுமென நாங்கள் எதிர்பார்த்தால் அதனை கைவிட்டு விட்டு தங்களுடைய வழமையான பாணியிலே பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அபிவிருத்தியிலும்கூட அவர்கள் பெரிய அளவில் அக்கறை காட்டவில்லை. 

கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினர்களின் நியமனத்தில்கூட மிகத் தந்துரூபாயமாக திட்டமிட்ட வகையிலேயே நியமிக்கப்படும் உறுப்பினர்களிலேயே பெரும்பான்மை இனத்தவர்களை கூடுதலாக நியமித்து தமிழர்களின் எண்ணிக்கையை சிறுபான்மையினராக்கியுள்ளார்கள். இந்த விடயத்தில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். பேரவை உறுப்பினர்களினால் எடுக்கப்படும் தீர்மானங்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திகளும்சரி நியமனங்களிலும்சரி பாரிய பின்புலத்துடன் பயணிக்கின்ற நிலைமை உருவாகி இருக்கின்றது. இது தொடர்பில் தீர்மானத்தை எடுக்குமாறு பிரதம மந்திரியிடம் நாங்கள் எடுத்துரைத்துள்ளோம். இன்னும் அதற்கு முடிவுகளை எனக்கு சொல்லப்படவில்லை. 

எனவே வருகின்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பேரினவாத சக்திகளுக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகள் நமது இருப்பை எமது எதிர்கால வாழ்க்கை அழிப்பதாக அமைந்துவிடும். சிறிய விடயத்தில்கூட அவர்கள் விட்டுக் கொடுக்க முடியாது என்றால் எவ்வாறான நிலைப்பாட்டில் அவர்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் சர்வதேச சமூகத்திற்கும் அவருடைய செயற்பாட்டுக்கும் உறுதுணையாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதை தெளிவாக சிந்தித்துக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி அவர்களிடமும் எமது மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் அரசியல் பிரச்சினைகள் தீர்ப்பது தொடர்பில் நாங்கள் உரையாடி இருந்தோம் அது தொடர்பில் எந்தவிதமான தீர்க்கமான பதிலும் எனக்கு சொல்லப்படவில்லை அது தொடர்ந்து காலம் கடத்தப்படும் நிகழ்வாகவே காணப்பட்டிருக்கின்றன. 

பேரினவாத சக்திகளுக்கு பின்னால் இங்கிருந்து செயற்படுவோர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் எதனையும் நாம் சாதித்துவிட முடியாது. தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்கள்கூட மக்களுக்கு குரல் கொடுக்கக் கூடிய நிலையில் இல்லை என்பதை மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.; வாகரையில் ஏற்பட்ட சம்பவம், தையிட்டி விகாரை தொடர்பான விடயம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடையங்கள் தேசிய அரசாங்கத்தின் கட்சியின் பிரதிநிதிகளால் தமிழ் மக்களுக்கு என்ன ஆணித்தரமான கருத்துக்களைகூற முடிந்தது அல்லது தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க முடிந்ததா என்பதை மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.

தமிழரசு கட்சிக்கு அளிக்கப்படும் வாக்குகள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி  ஆட்சி அமைப்பதற்கு வழங்கப்படும் என வதந்திகள் கூறப்படுகின்றன. இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவூவ் ஹக்கீம்கூட சில கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றார். இது உண்மையற்ற விடயம். நாங்கள் தனித்து நின்று போட்டியிடுவது என்றும் விரும்பினால் தமிழ் தேசியத்தை நேசிக்கின்ற கட்சிகள் இணைந்து பயணிக்கலாம் என்றும் நாங்கள் கடந்த மத்திய குழு கூட்டத்தில் முடிவெடுத்திருந்தோம். அதற்கு அப்பால் ஆட்சி அமைப்பதற்கு தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து கொள்ளலாம் எனவும் நாங்கள் முடிவெடுத்திருந்தோமே தவிர எந்தவிதமான ஒப்பந்தங்களும் எந்த விதமான திரை மறைவு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தற்போது பட்லந்த விடயம் பேசுபொருளாக மாறிஇருக்கின்றது. இந்த விடயத்த்தில் நாம் தொழிவாக இருக்கின்றோம். நிச்சயமாக இந்த சித்திரவதைகள் நடந்தியிருந்தால், படுகொலைகள் நடைபெற்றிருந்தால், அதனை நிச்சயமாக விசாரிக்கப்பட வேண்டும். அது நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும். எவராக இருந்தாலும் மனித உயிர்களுக்கு மதிப்பளித்து அந்த செயற்பாடுகள் மீண்டும் நகழாதிருக்க தண்டனை வழங்கப்பட வேண்டும்.

அது அதுபோல் அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும்கூட பல்வேறு வதை முகாம்கள் வடகிழக்கு பகுதியில் இராணுவத்தினரால் நடத்தப்பட்டிருந்தன பல படுகொலைகள் நடத்தப்பட்டிருந்தன. வெள்ளை கொடிய ஏந்தி வந்தவர்கள்கூட கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்கள். அப்பாவி பொதுமக்கள் என பலர் படுகொலை செய்யப்பட்ட காணொளிகளை பல்வேறு ஊடகங்கள்  வெளியிடப்பட்டிருந்தன. இதற்காக நாங்கள் நீதி வேண்டி சர்வதேச நீதி விசாரணை வேண்டுமென்று அழுத்தங்களையும் பிரயோகித்துக் கொண்டிருக்கின்றோம். அதுதொடர்பில் நாம் தீர்க்கமாக முடிவெடுக்கப்பட்டு இவ்வாறான படுகொலைகள் குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டும்.  விசாரணைகள் மிக நேர்மையாக முன்னெடுக்கப்பட வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான உரிய தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் பட்லந்தையின் மாத்திரம் அல்ல வடகிழக்கில் பல இராணுவ முகாம்களில் நடாத்தப்பட்டு வந்தன. எந்தவித பேதங்ளுமின்றி  விசாரிக்கப்பட வேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடு.

எதிர்காலத்திலும் அவ்வாறான செயற்பாடு நடைபெறாமல் இருப்பதற்கு உறுதியான நீதியான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் நீதி நீதி பொறிமுறைகளுக்கு எமது ஒத்துழைப்புக்களும் எமது போராட்டங்களும் என்றும் தொடரும்.

எனது அரசியல் பயணம் வடக்கு கிழக்கு சார்ந்துதான் நடத்தப்படுகின்றது. காலத்திற்கு காலம் கிழக்கு கூட்டணி கிழக்கை மையப்படுத்தி அமைக்கப்படும் அமைப்புக்கள் கிழக்கில் உள்ள தமிழர்களின் அரசியல் பலத்தை சிதைத்து விடுவதற்காகவும், அந்த ஆளுமையே இல்லாமல் செய்வதற்காகவும், அமைவதாகவே நாம் இதனை கருத வேண்டி இருக்கின்றது. வடகிழக்கை பார்க்கின்ற பொழுது தமிழ் மக்களின் பெரும்பான்மை இருக்கின்றது. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த கலாசாரம், ;மொழிமையும் இருக்கின்றன. கிழக்கை நாம் தனித்து விடுகின்ற பொழுது கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு உரிய அந்த எழுச்சி அல்லது விகிதாசாரம் மக்களுக்குரிய பாதுகாப்பு என்பது மிக கேள்விக்குறியாக மாறிவிடும். ஏனெனில் கிழக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் இனவாத அரசாங்கங்கள் பல்வேறுபட்ட தந்திர செயல்பாடுகள் மூலம் அம்பாறையிலும் திருகோணாமலையிலும் கிழக்கின் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக இல்லை என்பதை அந்த சூழலை உருவாக்கி வைத்திருக்கின்றார்கள்.

இவ்வாறான சூழ்நிலையிலே கிழக்கு கூட்டமைப்பு என்று சொல்லி மக்களின் வாக்குகளை சிதைத்து விடுகின்ற செயற்பாடானது தமிழ் மக்களின் அரசியல் பேரம் பேசும் பலத்தை சிதைத்து விடுவதாக அமைகின்றது.

கடந்த காலங்களில் பேரினவாத அரசாங்கங்களுடன் தமிழ் மக்களின் மக்களை அழித்து அவர்களுடைய போராட்டத்தை முடக்கி அவர்களுடன் சேர்ந்து ஊழல்களையும் வன்முறைகளையும் நடத்தியவர்கள்தான் ஒரு கூட்டமைப்பாக தற்போது வந்திருக்கின்றார்கள.; ஆகவே தமிழ் மக்கள் மிகத் தெளிவாக இருக்கின்றார்கள். மட்டக்களப்பை பொறுத்தவரையில் கடந்த போது தேர்தலில் இந்த பிரதேச பிரச்சாரங்களுக்கு எல்லாம் அப்பால் சென்று மிகத் தெளிவான ஒரு முடிவு எடுத்திருந்தார்கள். மிகஉறுதியான அடிப்படையிலும், பாரிய அளவிலும் இந்த பிரதேச சபை தேர்தலில் எதிரொலிக்கும் என்பது எதிர்பார்ப்பு. மக்களும் அவ்வாறான செயற்பாடுகளிலே தெளிவாக சிந்திப்பார்கள் என்பதுதான் நமது எதிர்பார்ப்பாக உள்ளது. என அவர் இதன்போது தெரிவித்தார்.

 



SHARE

Author: verified_user

0 Comments: